| | நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகி லவன்விதி. நமக்கென்? | | 95. | இயைந்த கணர்வே றாயிரம். காண்குதும். |
| குடில, | | அதற்கே னையம்? ஆயிரம் ! ஆயிரம் ! இதுமாத் திரமன் றிறைவ ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் | | 100. | உரைக்க வுன்னினே னெனினு முன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். |
| ஜீவ, | | வெருவலை குடிலா ! அரிதாம் நமது தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் | | 105. | செருக்குந் திண்ணமும் வெறுக்கையும்போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில ! உன் மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். | | | (ஒற்றன் வர) |
| ஒற்றன். | | மங்கலம் ! மங்கலம் ! மதிகுல மன்னவா ! |
| ஜீவ, | 110. | எங்குளார் நமது தூதுவர்? |
| ஒற்றன். | | இதோ ! இம் | | | மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும். ஒன்னல ரேறே ! | | | (ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க.) |
| குடில,(தனதுள்) | | ஒற்றன் முகக்குறி யோரிலெம் மெண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. | | 115. | போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியு மெமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. |
| ஜீவ,(தனதுள்) | | துட்டன் ! கெட்டான் ! விட்டநந் தூதனை யேசினான் ; இகழ்ந்தான் பேசிய வதுவையும், அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் | | 120. | படியில் விடுவனாம் : படைகொடு வருவனாம் : முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன் ! |
|
|
|