| 155. | சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவ னெங்ஙன முணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும் - காரண மதற்குங் கண்டிலம். ஆ! ஆ! |
| 160. | மாலைக் காக வாழ்த்தின னிவனும் ! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல. “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதுந் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதுங் “குற்ற முள்ளோர் கோழைய” ரென்பதுஞ் |
| 165. | சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையி லம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி யுளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ ! இச்சைசெ யச்சஞ் சிறிதோ ! |
| 170. | வஞ்சனையாற் பெறும் வாழ்வீ தென்னே ! நஞ்சுபோற் றனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை |
| 175. | எறிகட லுலகி லிலையிலை. நில் ! நில் ! - நீதியை நினைத்தோ நின்றேன்? பள ! பள ! ஏதிது? என்மன மிங்ஙனந் திரிந்தது ! கொன்றபி னன்றோ முதலை நின்றழும்? வா வா காலம் வறிதாக் கினையே. |
| 180. | ஓவா திவையெலா முளறுதற் குரிய காலம் வரும்வரும். சாலவு மினிதே ! |
| | 1 |
| | (குடிலன் போக.) |