பக்கம் எண் :

மனோன்மணீயம்
69

பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையுஞ்
சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு
தோற்றுபே ரழகும் ஆற்றல்சா லன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
30.பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,
ஆர்த்தெழு மன்பினா லனைத்தையுங் கலந்துதம்
என்பெலாங் கரைக்குநல் லின்பந் திளைப்பர்.
தமக்கூண் நல்கும் வயற்குப யோகம்,
எனப்பலர் கருது மிச்சிறு வாய்க்கால்
35.செய்தொழி லெத்தனை விசித்திரம் ! ஐயோ !
அலைகடல் மலையா மலையலை கடலாப்
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால் !
பாரிதோ ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
40.தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு
இன்னதென் றில்லை ; யாவையு மீர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தகுமிவை யெனவோர்ந் துருட்டிக்
45.கொண்டு சென்று இட்டுமற் “றையா !
அண்ட யோனியி னாணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாய்த் தூங்கியுங், குகைமுகம்
இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும்,
50.கதித்தெழு சுனையாய்க் குதி்த்தெழுந் தோடியும்,
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்,
மதகிடைச் சாடியும், வாய்க்கா லோடியும்
பற்பல பாடியான் பட்டங் கீட்டியது
55.அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள் ;
இன்னமு மீதோ ஏகுவன்” எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவ ணடைந்துமற், றிராப்பகன் மறந்து