| | நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? |
| (நீரைக் கையாற்றடுத்து) | 60. | நிரந்தரம் ! ஐயோ ! நொந்தனை ! நில் ! நில் ! இரைந்ததென்? அழுவையோ? ஆயி னேகுதி. நீரே ! நீரே ! என்னையுன் னிலைமை? யாரே யுனைப்போ லனுதின முழைப்போர்? நீக்கமி லன்பும் ஊக்கமும் உறுதியும் | | 65. | உனைப்போ லுளவேற் பினைப்பே றென்னை? - |
| (நாங்கூழ்ப்புழு வை நோக்கி) | | ஓகோ ! நாங்கூழ்ப் புழுவே ! யுன்பாடு ஓவாப் பாடே. உணர்வேன் ! உணர்வேன் ! உழைப்போ ருழைப்பி லுழுவோர் தொழின்மிகும். உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. | | 70. | எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. விடுத்தனை யிதற்கா, எடுத்தவுன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக்கொணர்ந் தும்,புகழ் வேண்டார் போல | | 75. | ஒளிக்குவை யுன்குழி வாயுமோ ருருண்டையால் ! இப்புற் பயிர்நீ யிங்ஙன முழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனங்குங் குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? | | 80. | ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? |
(நாங்கூழ்ப் புழு குழிக்குண் மறைதலைநோக்கி) | | விழுப்புகழ் வேண்டலை. அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்றெழில் நடத்துதி. ஆ ! ஆ ! எங்கு மிங்ஙனே யிணையிலா இன்பும் பங்கமி லன்புந் தங்குதல் திருந்தக் | | 85. | காணார் பேணும் வாணா ளென்னே ! அலகிலாத் தோற்றமோ டிலகிய வுலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர் - | | 90. | நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே ! சினக்கனல் எழும்பும், நமக்கேன் இச்சினம்? |
|
|
|