| படை, | | ஜே! ஜே! புருஷோத் தமர்க்கு ஜே! ஜே! |
| நட, | | பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும், வார்கழ லொலியும், வயப்படை யொளியும், | | 110. | பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில் உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும், இருகனல் நடமிடு மொருகரு முகிலில் | | 115. | மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல. வேட்டலோ இதுவும் ! விளையுமா றெவனோ ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த கொய்யுளைத் திரைகடற் கூட்டமும், பெய்மத | | 120. | மைம்முகி லீட்டமும், வான்தொடு விலோதனப் பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளுஞ் செறிந்து, நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம். அந்தோ ! அந்தோ ! மனோன்மணி வதுவை | | 125. | வந்தவா றிதுவோ ! வந்தவா றிதுவோ ! | | | (இரண்டுழவர்கள் வர) |
| முதலுழவன். | | வியப்பென்? சுவாமி ! |
| முதல் உழ, | | அறிவேன். போருக்கு |
| | மணமொழி வழங்க வன்றோ விடுத்தான்? |
| 2 - வது உழ, | 130. | மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளுங் கரியா கும்மே ! |
| முதல் உழ, | | ஐய ! அதுநாம் அறியோம். |
| | குடிலன் படிறன். கொற்றவன் நாடும் |
|
|
|