| | முடியுங் கவர்ந்து மொய்குழன் மனோன்மணி | | 135. | தன்னையுந் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான். |
| | ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய், புகன்றதார்? |
| 140. | ஐய ! நா னறைவது கேட்டி, எனது மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதா லந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். |
| (2 -வது உழவனை நோக்கி). | | அன்றுநா ளாதித்த வாரம். அன்றுதான் |
| 145. | சாத்த னுன்னுடன் சண்டை யிட்டது. |
| (நடராஜனை நோக்கி) | | சாத்திரி தரையி லிருக்கிறார். அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் - |
| (நாற்புறமும் நோக்கி செவியில்) | | இருந்து பலபல இரகசிய மியம்புவர் - |
| நட, | | திருந்தச் செப்பாய். யாருள ரிவ்வயின்? |
| 2 - வது உழ, | 150. | இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு உற்ற ஜோசியர். |
| முதல் உழ, | | பொறு !யா னுரைப்பன். |
| | மற்றவ் வெல்லையென் மைத்துன னொதுங்கி யருகே நின்றனன். அப்போ தறைவர் :- “மருகா ! நேற்று மந்திரி மனைவி | | 155. | பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோக முண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள் ; வரும்வரும் விரைவி லென்றேன் யானும். | | 160. | மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்று அது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். |
|
|
|