பக்கம் எண் :

மனோன்மணீயம்
74

நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு
வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற்
165.சிரித்தன ளென்பது முகத்தில் தெரிந்தேன்.”-
எனப்பல இரகசியம் இயம்பி “வலியோர்
மனக்குறி, முகக்குறி, வறிதாஞ் சொற்கள்
இவைபோல் வருபவை யெவைதாங் காட்டும்?”
எனவுரைத் திருவரு மெழுந்துவின் நகைத்தார்.
170.பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே
யெனக்கிங் கிவையெலா மியம்பினன். உனக்குச்
சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும்
உண்டு:மற் றவனைக் கண்டுநீ வினவே.

2 - வது உழ,வேண்டாம்! வேண்டா மையம்மற் றதற்கு.
175.மீண்டு மொருமொழி கேள்.இவ் வழியாய்த்
தூதுவர் போகுங் காலைத் தாக
ஏதுவால், இரும்படி யிராம னென்றன்
தங்கை மனைக்கு வந்தவத் தருணம்
அங்கியா னிருந்தேன். “அரண்மனைச் செய்தி
180.என்ன?” என் றேற்கவ னியம்பும் : “மன்னன்
தெத்தெடுத் திடும்படி யத்தன முண்” டென,
“எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ்
செப்பா தெழுந்து சிரித்தவ னகன்றான்.

முதல் உழ,பலதே வற்கிவன் நலமிகு சேவகன்.

2 - வது உழ,185.

குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம்.


முதல் உழ,ஆயினும், நமக்கஃ திழிவே. மேலுந்
தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்
குறுதுய ரொருவரும் ஆற்றார்.

2 - வது உழ,

அறிவிலாத்

தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்,
190.சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை
விடுமோ? சொல்லாய்.

முதல் உழ,

விதியெனப் பலவும்

படியோர் பாவனை பண்ணித் தமது
கடமையின் விலகுதன் மடமை. அதனால்