பக்கம் எண் :

மனோன்மணீயம்
75

நாட்டிற் போர்வரின் நன்குபா ராட்டி
195.யெஞ்சா வெஞ்சம ரியற்றலே தகுதி.

2 - வது உழ,அரசன், அரசனேற் சரியே. சுவாமி !
உரையீர் நீரே. திருவார் வாணியை
யறியீர் போலும்,

நட,

அறிவோம். அறிவோம் !

நல்ல தப்புறஞ் செல்லுமின் நீவிர்.-

(உழவர் போக)


(தனதுள்)200.ஏழைகள் ! தங்க ளாழமில் கருத்தில்
தோற்றுவ தனைத்துஞ் சாற்றுவர். அவர்தந்
தோற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல்,
சுகந்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும்
அனுமா னிக்கும் அளவையும் முனும்பினுங்
205.கூட்டிக் காரண காரியக் கொள்கைகள்
காட்டலும், காணக் களிப்பே ! ஆயினும்
பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர்
ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர்.
அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம்.
210.வரும்வித மிதுவே ! மட்குடத் துளநீர்
புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல்,
அரச ரமைச்ச ராதியர் தங்கள்
சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள்
விழிமுகம் நகைமொழி தொழில்நடை யிவைவழி
215.ஒழுகிடும். அவைகளை யுழையுளார் தமக்குத்
தோற்றிய பலவொடுந் தொடுத்துக் காற்றில்
தூற்றுவர். எனினுஞ் சொன்னவை முற்றுங்
குடிலன் குணமுடன் கூடலா லவையும்,
படையிவண் வரநாம் பார்த்ததும்,
220.அடையவும் முனிவற் கறைகுவஞ் சென்றே.

(நடராஜன் போக)

மூன்றாம் அங்கம் : இரண்டாவது களம்
முற்றிற்று.