பக்கம் எண் :

மனோன்மணீயம்
76

மூன்றாம் அங்கம்

3 - வது களம்

இடம் : கன்னிமாடம், நிலாமுற்றம். காலம் : யாமம்.
மனோன்மணி உலாவ : வாணிநிற்க :
செவிலி படுத்துறங்க.

(நேரிசை யாசிரியப்பா)

செவிலி, (படுத்தபடியே)ஏதம்மா? நள்ளிரா எழுந்து லாவினை? -
தூக்க மொழிவையேல் சுடுமே யுடலம்

மனோன்மணி,உடலா லென்பயன்? சுடவே தகுமது.
வேர்க்கிற திவ்விடம். வெளியே யிருப்பல்.
5.போர்த்து நீ தூங்கு !

(செவிலி தூங்க)

வாணீ ! உனக்கும்

உறக்க மில்லையோ?

வாணி.

எனக்கது பழக்கம்.


மனோ,வருதி யிப்புறம். இரு இரு. -

(இருவரும் நிலாமுற்றத்திருக்க)

இதுவரை


எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள் !
நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் !
10.உறக்கங் கொண்டனள் செவிலி ! குறட்டைகேள்
கையறு நித்திரை ! வாணீ ! மற்றிது
வைகறை யன்றோ?

வாணி.

நடுநிசி அம்மா !


மனோ,இத்தனை யரவமேன்? முனிவ ரறையில்
நித்தமு முண்டிது ! நிதியெடுப் பவர்போல்
15.தோண்டலு மண்ணினைக் கீண்டலுங் கேட்டுளேன்.
ஊரிலேன் இன்றிவ் உற்சவ வரவம்?

வாணி. (தனதுள்)போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ! ஒளிப்பனோ!

மனோ,கண்டதோ நகருங் காணாக் கனவு?