| 20. | கனவெனிற் கனவு மன்று : மற்று நனவெனில் நனவு மன்று. |
| | கண்ணாற் கண்டிலை போலும் ! அம்ம ! |
| மனோ, | | கண்ணா லெங்ஙனங் காணுவன்? கண்ணுளார் ! |
| வாணி, | | எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை ! |
| மனோ, | 25. | எண்ணவும் படாஅர் ! எண்ணுளும் உளாஅர் ! |
| வாணி, | | புதுமை ! ஆயினும் எதுபோ லவ்வுரு? |
| மனோ, | | இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப ! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு ! | | 30. | பண்ணியல் வாணீ ! வாவா ! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின ! |
| வாணி, | | என்பா டிருக்க ! யாவரு மறிவார் ! உன்பா டதுவே யொருவரு மறியார். |
| மனோ, | | பாக்கிய சாலிநீ ! பழகியும் உளையே ! | | 35. | நீக்குக இத்தீ நினைவு ! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் | | | (வாணி வீணைமீட்ட) |
| | அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம் ! | | | (வாணி பாட) |
---------- சிவகாமிசரிதம் (குறள்வெண் செந்துறை) | “வாழியநின் மலரடிகள் ! மௌனதவ முனிவ ! | மனமிரங்கி யருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயிற் | | பாழடவி யிதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் | பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே. | 1 |
|
|
|