| சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந் | தன்மையென நான்நடக்கத் தான்வளரும் அடவி, | | ஆரிருளி லினிநடக்க ஆவதிலை. உடலம் | மாறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்.” | 2 |
| என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும் :- | “ஏகாந்தப் பெருங்ககனம் ; இதிலுலக ரணையார் ; | | சென்றுறைய மடமுமிலை ; திகழ்வெளியென் வீடு ; | சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம். | 3 |
| அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த | அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார். | | உறங்கவவர் பணிப்பாயும் பூவணையும் உன்னா | ருண்ணவெனிற் பாலமிழ்து மொன்றாக மதியார். | 4 |
| ஆகலிலென் பாலுறுவது யாதெனினு மைந்த ! | அன்புடன்நீ யென்பிறகே யணையிலஃ துனதாம். | | வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும் | விடியும்..உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்.” | 5 |
| என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர, | ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து | | நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா | நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான். | 6 |
| இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க | இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய | | அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள் | அரியரக சியந்தமக்குள் ளறைந்துநகை புரிய ; | 7 |
| என்புருகப் பிணைந்த அன்றில் இணைசிறிது பிரிய | ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ, | | அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள் | அலர்மலர்க்கண் நீரருவி அகமுடைந்து தூவ ; | 8 |
| விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல் | விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட ; | | இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும் | இறைவியும்வந் திறுத்தனள்மற் றினைஞருயிர் வாட. | 9 |
|
|
|