பக்கம் எண் :

மனோன்மணீயம்
79

பொறியரவின் சுடிகையுறு பொலன்மணியி னொளியும்,

பொலிமதத்தின் கறையடியின் புலைமருப்பி னொளியும்

அறிவரிய சினவுழுவை அழல்விழியி னொளியும்,

அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே.

10


பிரிவரிய ஊசிவழி பின்றொடரு நூல்போற்

பேரயர்வின் மனமிறந்து பின்றொடரு மைந்தன்,

அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும்

அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான்.

11


ஒருங்கார நிறைமுளரி யுழையொதுக்கி நுழைந்தும்,

உயாம்லையின் குகைகுதித்தும் ஓங்கார ஒலியே

தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார்

சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே.

12


நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண்

நிறுவுதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி

வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும்

மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி.

13


நின்றதனி யிடமிவர்கள் நோந்தவுடன் முனிவன்

நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி

ஒன்றியமெய்ப் பத்தரில் தன்னுளங்கூசி யொருசார்

ஒதுங்குகின்ற மைந்தனக முவப்பவிவை யுரைக்கும் :-

14


“இனிநடக்க வழியுமிலை. இனித்துயரு மில்லை.

இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே

பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து

பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே.

15


தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமற்

சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார்.

என்னேயிம் மனிதர்மதி !” எனநகைத்து முனிவன்

இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான்.

16


இருந்தமுனி “வருந்தினவ ! ஏதுனது கூச்சம்?

இருவருமே யொருவரெனி லெவர்பெரியர் சிறியர்?

திருந்தஅன லருகிலினிச் செறிந்துறைதி மைந்த !

சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே.”

17