பக்கம் எண் :

மனோன்மணீயம்
80

எனவிரங்கி யிரண்டுமுறை யியம்பியுந்தன் னருகே

யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே

மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த

மகன்மலைவு தெளிந்துவெளி வரும்வகைகள் பகர்ந்தான்.

18


பகர்ந்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில் :

பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத்

திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கி

சிந்தைநனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான்.

19


செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி

திகைக்கவெலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே

விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி

மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே.

20


மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய

முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும் :-

“எழிலாரு மிளமையினில் இடையூறா திகளால்

இல்லமகன் றிவ்வுருவ மெடுத்திவண்வந் தனையோ?

21


ஏதுனது கவலை?உளத் திருப்பதெனக் கோதாய்

இழந்தனையோ அரும்பொருளை? இகழ்ந்தனரோ நண்பர்

காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க்

கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய்.

22


ஐயோவிவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும்

அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய்.

கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக்

காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே.

23


நண்பருற வினர்கள்நமை நாடியுற வாடல்

நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென என்ணாய் !

பெண்களகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே !

பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம் !”

24


எரியுமுள நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு

ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து

விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும்

வெளிப்பட்ட கள்வனும் போல்வெட்கிமுகம் வெளுத்தான்.

25