பக்கம் எண் :

மனோன்மணீயம்
83

மான்மறவாக் கலையினமே ! வாழ்பிடிவிட் டகலா

மதம்பெருகு மாகுலமே ! வன்பிகமே ! சுகமே !

நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரோ?

நவில்விரெனப் பின்றொடர்ந்து நாளனந்தங் கழித்தேன்.

42

இவ்விடமு மவ்விடமு மெவ்விடமு மோடி

இதுவரையுந் தேடியுமென் னதிபரைக்கண் டிலனே.

எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண?

இக்காய மினியெனக்கு மிக்கவரு வருப்பே

43


ஐயோவென் னுள்ளநிலை யறியாரோ வினியும்?

ஆசைகொண்டு நானலைந்த கத்தனையும் பொய்யோ?

பொய்யேதா னாயிடினும் புனிதரவர் தந்த

போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதோ?

44


நல்லர்அரு ளுடையரென நம்பி யிதுவரையும்

நானுழைப்ப தறிவரெனி லேனெதிர்வந் திலரோ?

இல்லையெனி லென்னளவு மிவ்வுலக மனைத்தும்

எந்நலமுங் கொல்லவென வெடுத்தசுடு காடே.

45


என்னுடைய உயிர்த்துணைவ ரெண்ணரிய அருளில்

ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு

மன்னுதவ மாமுனிவ ! மனத்துயரம் உன்பால்

வகுத்தாறி னேன்சிறிது. மறுசாக்ஷி யில்லை.

46


இனியிருந்து பெறும்பயனென்? இவ்வழலே கதி”யென்று

எரியுமழ லெதிரேநின் றிசைத்தமொழி முழுதும்

முனிசெவியிற் புகுமுனமே மூதுருவம் விளக்கி

முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி -

47


“சிவகாமி யானுனது சிதம்பரனே” என்னச்

செப்புமுன மிருவருமற் றோருருவ மானார் !

எவர்தாமுன் னணைந்தனரென் றிதுகாறு மறியோம்.

இருவருமொன் றாயினரென் றேயறையுஞ் சுருதி.

48


பரிந்துவந்து பாாவ்தியும் பாரதியுங் கஞ்சப்

பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த,

அந்ததியும் அம்ம!இஃ தருங்கதியென் றஞ்ச

ஆர்வமுல கார்கவென ஆரணங்க ளார்த்த.

49