| ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ ! | அறத்துறை புகுந்துயிர்க ளன்புவௌம் மூழ்க ! | | பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த | பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க ! | 50 |
----------- | மனோ, | | வாணீ ! மங்காய் ! பாடிய பாட்டும், வீணையி னிசையும் விளங்குநின் குரலுந் | | 40. | தேனினு மினியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையு முயிரையு முருக்கும். ஆ ! ஆ ! - | | | (இருவரும் சற்று மௌனமாயிருக்க) | | | உனதுகா தலனெங் குளனோ? உணர்வைகொல்? |
| வாணி. | | எனது சிந்தையி லிருந்தனர் : மாறார், |
| மனோ, | 45. | போயின இடம்நீ யறியாய்? |
| வாணி. | | நாரணன் | | | முனிவர் தம்மடத் தேகினர் தனியென ஓதின னோர்கால். |
| மனோ, | | ஓகோ ! ஓகோ ! - | | | (மௌனம்) | | | கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய். |
| வாணி, | | அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும் ! | | 50. | ஒருநா ளந்தியி லிருவரு மெதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் | | 55. | சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல் ஒழுகும தீம்புன லோதையுங் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி |
|
|
|