பக்கம் எண் :

மனோன்மணீயம்
85

60.யிருவரு மௌனமாய் நெடும்பொழு திருந்தோம்.
கரையிடை யலர்ந்த காவியொன் றடர்த்தென்
அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர்.
வருவதிங் கறியா மதியிலி யதனைக்
கண்ணினை யொற்றிலன்; உள்மணம் முகந்திலன்;
65.மார்பொடு சேர்த்திலன் ; வார்குழற் சார்த்திலன் ;
ஆர்வமும் அன்பும் அறியார் மான
ஓடுந் தீம்புனன் மாடே விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன்.
முறுவலோ டவரும் ஏதோ மொழிய
70.உன்னு முன்னரென் னன்னையங் கடைந்தாள்.
தீமொழி பலவுஞ் செப்பினள். யானோ?
நாவெழலின்றி நின்றேன் நண்பர்
மறுமொழி யொன்றும் வழங்கா தேகினர்.
அதுமுத லிதுகாறு அவர்தமை ஐயோ !
75.கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன்.
ஒருமுறை கண்டென் னுளக்கருத் தவருடன்
உரைத்தபோ தன்றி யொழியா துயிரே !

மனோ,உரைப்பதென் வாணீ ! உளமும் உளமும்
நேர்படஅறியா வென்றோ நினைத்தாய்?

வாணி.80.ஓர்வழிப் படரி னுணருமென் றுரைப்பர்.

மனோ,ஏனதி லையம்? எனக்கது துணிபே !
பூதப்பொருட்கே புலன்துணை யன்றிப்
போதப் பொருட்குப் போதும் போதம்.
இரவியை நோக்கற் கேன்விளக் குதவி?
85.கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும்.
பட்டே யுணரு முட்டா ளர்கள்போல்
தொட்டே யுணருந் துவக்கிந் திரியும்.
நுண்ணிய கருவியாங் கண்ணோ உணரும்
எண்ணறச் சேய்த்தாம் நுண்ணிய ஒளியை !
90.கண்ணினு மெத்தனை நுண்ணிய துள்ளம் !
களங்க மறுந்தொறும் விளங்குமங் கெதுவும்,
உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம்