| மனோ, | | நம்புவ தன்றிமற்று |
| | என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள் தருக்கவா தத்தால் தாபித் திடுவோர் கரத்தாற் பூமணங் காண்பவ ரேயாம் ! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் |
| 105. | தரும்பக் குவமிலார் தமதுளம் போய வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றுந் துணிவா யெனயான் இச்சிறு தினத்தி னியைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன். வாணீ ! ஐயோ ! |
| 110. | நம்பலென் பதுவே யன்பின் நிலைமை ! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை யுளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் னறிவினை வளர்த்தே யனுபவ வழியா யறிவதை யந்தோ ! |
| 115. | அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனி லிலையென வயிர்ப்போம்’ எனத்திரி வாதிய ரன்பொரு போதுமே யறியார் தாய்முலைப் பாலுள்நஞ்சு ஆய்பவ ரவரே ! முற்றுங் களங்க மற்றிடில் ! ஆ ! ஆ ! |
| | (உடல் புளகாங்கிதமாய் நடுங்க) |
| 120. | ஏதோ வாணீ ! இப்படி யென்னுடல்?- |