பக்கம் எண் :

மனோன்மணீயம்
87

வாணி,இக்குளிர் காற்றி னிடையே இருத்தல்
தக்க தன்றினி. தாயே ! பாராய் !
125.அம்மழை பெய்யு மிம்மெனும் முன்னம்.

மனோ,

நனைந்திடி லென்னை ? கரைந்திடு மோவுடன் ?
(எழுந்து மேகம் பார்க்க)

 

வாணி, (தனதுள்)ஐயோ ! ஏன்நான் அத்திசை காட்டினேன்?
பொய்யெப் படியான் புகல்வன் !

மனோ,

வாணீ !

ஊர்ப்புற மத்தனை யொளிஏன்? ஓ ! ஓ !
130.ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி.
போர்க்குறி போலும். புகலுதி யுண்மை.

(மழை இரைந்து பெய்ய)

அஞ்சலை அஞ்சலை. இதோவென் னெஞ்சிடை
வெஞ்சரம் பாயினு மஞ்சிலேன் ! விளம்பு.

வாணி.இம்மழை நிற்கலை அம்ம ! அறைகுவன், -
135.விளம்புவன். வீட்டுள் வருக !
தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே !

(இருவரும் போக)

மூன்றாம் அங்கம் : 3 - வது களம்

முற்றிற்று