| | நோவுஞ் சாவு மொன்றே. அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி யனைத்தும் |
| 30. | இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியி லெத்தனை பெரியதுஒவ் வொன்றும் ! இரவியு மிம்மீ னினங்களுங் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர். இதுபோல் |
| 35. | ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை யென்பதே. இப்பெரு முலகெலா மொப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் |
| 40. | ஓரித ழதனி லோர்சா ருதித்த நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை. ஏன்மிக ! நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலி லுறுதுரும் பென்ப. அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் |
| 45. | எப்படிப் பார்க்கினு மிசையாப் பேய்த்தேர். இங்கிவை யுண்மையேல், எங்குநா முள்ளோம்? நீர் யார்? நான் யார் ! ஊரெது? போரெது? போரெனப் பொறுக்கலீர் ! ஓ ! ஓ ! பாரும் ! மருவறு மாயா மகேர்ததி யதனிற் |
| 50. | புற்புத மனைய பற்பல அண்டம் வெடித்துஅடங் கிடுமிங் கடிக்கடி, அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம். |
| 55. | தன்றொழில் சலிப்பற இயற்றும். மற்றதனுள் படுபவர் திரிகையுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர்பின் ! விம்மி விம்மிநீர் அழுதீர், தொழுதீர் ஆடினீர், பாடினீர், யாரென் செய்வர் ! யாரென் செயலாம் ! |
|
|
|