பக்கம் எண் :

மனோன்மணீயம்
91

செப்பிய நிட்டையுஞ் சித்தநற் சுத்தியும்
எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம்

95.ஒப்பறு நுந்திற மென்றோ உன்னினீர்?
அந்தோ ! அந்தோ ! அயர்ப்பிது வியப்பே !
சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம்
பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு
நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்?

100.ஆவா ! யாம்முன் அல்லும் பகலும்
ஓவாப் பாவமே யுஞற்றியெப் போதும்
ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும்,
பிறர்புக ழதுவே யறமெனப் பேணியும் ;
மகிழ்கினும் துயருழந் தழுகினுஞ் சினகரந்

105.தொழுகினும் நன்னெறி யொழுகினும் வழுவினும்
எத்தொழில் புரியினு மெத்திசை திரியினும்
“நாமே யுலகின் நடுநா யகம்நம்
க்ஷேமமே ஜகசிருஷ் டியினோர் பெரும்பயன்”
என்னவிங் கெண்ணி யெமக்கெமக் கென்னுந்

110.தந்நய மன்றிப் பின்நினை வின்றி
முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும் ;
தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத்
தீயிடைத் துடித்தும் ; ஐயஞ்சிறி தடையில்
வாய்மண் ணிறைய மதக்குழி யதனுள்

115.குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும் ;
பிறர்புகழ் காணப் பெரிதக முடைந்தும் ;
பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும் ;
சிறியரைக் காணிற் செருக்கியும் ; பெரியரைக்
காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும் ;

120.எனைத்தென எண்ணுகேன் ! நினைக்கினு முடலம்
நடுங்குவ தந்தோ ! நம்மை யிங்ஙனம்
கொடும்பே யாயிரங் கூத்தாட் டியவழி,
விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள்
“ஏ ! ஏ ! கெடுவாய் ! இதுவல உன்நெறி

125.வா ! வா ! இங்ஙனம்.” எனமன மிரங்கிக்
கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த