| | காமமா திகளுடன் கடும்போர் விளைக்க ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறுநம் |
| 130. | ஆவியுள் தைரிய மளித்தவர் யார்கொல்? சுந்தரர் கருணையோ நந்திற மோவிவை? உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி : கோட்டையு மில்லை, பூட்டுதா ழதற்கிலை : நஞ்சே யனைய பஞ்சேந் திரியம், |
| 135. | அஞ்சோ வாயில்? ஆயிரம் : ஆயிரம் : அரைநொடி யதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவே சாற்றிடக் கணிதசங் கேதமே யிலை. இப்பெரும் விபத்தி லெப்படிப் பிழைப்பீர்? |
| 140. | அருளா தரவால் யாதோ இங்ஙனம் இருள்தீர்ந் திருந்தீர் : இலையெனில் நிலையெது? விட்டதுந் தொட்டதும் வெளிப்பட லின்றி நிட்டையும் நீருங் கெட்டலைந் திடுவீர் ! கட்டம் ! கட்டம் கரதலா மலகமாய்க் |
| 145. | கண்டுமோ அருளிற் கொண்டீ ரையம் ! “யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?” என்றீர் நன்றாய். நண்பரே ! நம்நிலை கண்டுள மிரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை |
| 150. | நமக்கென உரித்தோ? நானா வுயிர்கள் எவர்க்கும் அதுபொது வன்றோ? இயம்பீர். எங்கிலை யவனருள்? எல்லையி லண்டந் தங்குவ தனைத்து மவனருட் சார்பில் அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று |
| 155. | விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியி லருளலாற் பிறிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுய ரன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே யன்றிப் பயனறக் |
| 160. | குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? |
|
|
|