| | பாரும் ! பாரும் ! நீரே கூறிய சிலந்தியின் பரிவே யிலங்கிடு முறைமை ! பூரிய உயிரிஃ தாயினும், தனது சீரிய வலையிற் சிக்குண் டிறந்த |
| 165. | ஈயினை யீதோ இனியதன் குஞ்சுகள் ஆயிர மருந்த அருகிருந் தூட்டி மிக்கநல் லன்பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம் பயில்வ ததிசயம் ! அதிசயம் ! இப்படி முதற்படி. இதுமுத லாநம் |
| 170. | ஒப்பறும் யாக்கையா முயர்படி வரையுங் கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால் இத்தனி யுலகி லெத்துயர் காணினும் அத்தனை துயரும்,நம் மழுக்கெலா மெரித்துச் சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க |
| 175. | வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகாற் காரண காரியங் காண்குவ மல்லேம். யாரிவை யனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமல ரந்தியின் |
| 180. | அலர்தலே யன்னவை விளர்நிறங் கிளர நறுமணங் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோங் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யா ருணரார்? நிசியலர் மலர்க்கு |
| 185. | வெண்மையு நன்மண முண்மையு மிலவேல் எவ்வண மவற்றி னிஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேயிடி லன்றோ காய்தருங் கருவாம்? இவ்வி நோக்கிடி லெவ்வித தோற்றமுஞ் |
| 190. | செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை யன்பே யாக்கும். சிற்றறி வாதலான் முற்றுநா முணரோம். அந்தியி லிம்மல ரலர்வேத னென்பதிங்கு அறிகிலோ மாயினு மதற்குமோர் காரணம் |
|
|
|