| 195. | உளதென நம்பலே யூகம். அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? |
| 200. | யாரிங் குலகெலா மறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதா ரொவ்வார்? நம்புவம் நாத னென்பதா ரொவ்வார் ஆயினும் பாரும் ! அம்மணி மனோன்மணி, |
| 205. | ஏதோ ஊழ்வினை யிசைவால் தனது காதாற் கேட்கவுங் கண்ணாற் காணவும் இல்லா வொருவனை யெண்ணி மயங்கினள். அல்ல லிதுவே போதும். அஃதுடன், அப்புரு டன்றோ னாரென ஆயில் |
| 210. | ஒப்புறு புருடோத் தமனே யென்ன எப்படி நோக்கினு மிசையும். அப்படியே செப்பினர் யாவுந் தெரிந்தநங் குருவும். ஏதோ வொருவன் சூதா ஏவிய தூதால் வந்ததே யீதோ பெரும்போர் ! |
| 215. | போர்புரிந் திடவரு புருடோத் தமனும் வார்குழன் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலு மெத்தனை நம்பிய அன்பர் ! இம்மென வொருமொழி யிசைத்திவர் தம்மை ஒருவரை யொருவ ருணர்ந்திடப் பண்ணில், |
| 220. | வெருவிய போரும் விளைதுய ரனைத்தும் இருவர்தந் துக்கமு மெல்லா மேகும். இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க அப்படி யொன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு |
| 225. | அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை யிதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பநதம் நினைத்தற் கென்னை? ஒன்றுந் தோற்றுவ தன்றுஎன் றனக்கே, |
|
|
|