| | என்றுநா னெண்ணி யெங்குரு நாதன் |
| 230. | திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினுஞ் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. |
| 235. | அற்பமு மதிலிலை ஐயம். நமதுமற்று எய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே யிவ்வருள் தாங்கிடு மென்பதிற் சமுசய மென்னை? |
| 240. | இல்லா மாயை யென்செய வல்லதாம்? எல்லா மவனரு ளல்லா தில்லை. என்னநு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை யிழுதென நெக்குநெக் குருகி |
| 245. | இருப்பவர் பிறர்க்கா யிராப்பக லுழைப்பர். ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமுந் தாங்கு மருளிலோ ரங்கமாச் சகலமுஞ் செய்வர். அஃதவர் சமாதி. எங்கெலாந் துக்கங் காணினும் அங்கெலாம் |
| 250. | அங்கங் கரையநின் றாற்றி “ஐயோ ! எம்மையுங் காத்த இன்னரு ளிவரையுஞ் செம்மையிற் காக்க” எனமொழி குளறி அழுதுவேண் டுவதே யன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. | | | 2 | | | (சுந்தர முனிவரும் நடராஜரும் வர : கருணாகரர்,நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க) |
| சுந்தர, | 255. | எல்லாம் நடேசரே ! உமதுபே ரருளே ! அல்லா தென்னா லாகுமோ? சுருங்கை இத்தின மெப்படி முடியும்நீ ரிலரேல்? எத்தனை கருணை? என்னைகைம் மாறு? |
| நட, | | நல்லது ! நல்லது ! சொல்லிய முகமன் ! |
|
|
|