பக்கம் எண் :

மனோன்மணீயம்
96

260.வேலை யெனதோ? உமதோ? விநோதம்
ஏவிய வழியான் போவதே யல்லால்
ஆவதென் என்னால்? ஆ ! ஆ ! நன்றே !

சுந்தர,கருணா கரரே ! களைப்பற நீரிங்கு
ஒருவா றுறங்கவென் றுன்னி யன்றோ

265.

இவ்விட மனுப்பினோம்? என்னை சிறிதுஞ்
செவ்விதில் தூங்கா திருந்தீர் ! சிச்சீ !
எத்தனை நாளா யினநீர் தூங்கி !
இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்?
பன்னா ளிரவும் பகலு முழைத்தீர்.


270.எந்நா ளாறுவீ ரிவ்வலுப் பினிமேல்?

கருணா.அடியேற் கலுப்பென்? அருளா லனைத்தும்
முடிவது. மேலும், யான்வரும் வேளை
யிட்டமாம் நிட்டா பரருந் தனியாய்
நிட்டைவிட் டெழுந்தார். இருவரு மதனால்

275.

ஏதோ சிலமொழி யோதிமற் றிருந்தோம்.
ஈதோ உதயமு மானதே. இனியென்?


சுந்தர,விடிந்த தன்றிது. வெள்ளியி னுதயம்.
படும், படும். மிகவும் பட்டீர் வருத்தம்.
உங்கள்பேச் சறிவோம். ஓயாப் பேச்சே !

280.இங்கது முடியுமோ? ஏனுங் கட்குஞ்
சமயிகட் காம்சச் சரவு?
அமையு முங்கட் கவரவர் நிலையே.

(3)
(யாவரும் போக)


மூன்றாம் அங்கம் : 4-வது களம்
முற்றிற்று.