பக்கம் எண் :

மனோன்மணீயம்
98

நான்காம் அங்கம்

முதற்களம்

இடம் : படை பயில் களம் காலம் : காலை.
பலதேவன் படையணிவகுக்க,

குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க. 
(நேரிசை ஆசிரியப்பா)


குடிலன்.பருதியு மெழுந்தது : பொருதலும் வந்தது -

(பெருமூச்செறிந்து)


(தனிமொழி) 
கருதுதற் கென்னுள. காணுதும். ஆ ! ஆ !
ஒருவன தாசைப் பெருக்கா லுலகில்
வருதுயர் கடலிற் பெரிதே ! வானின்
5.எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்
ஈண்டணி வகுக்குமிக் காண்டகு மிளைஞரில்
மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே !
மாண்டிட லன்றே வலிது. மடுவுள்
இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை
10.வரவரப் பெரிதாய்க் கரைவரை வால்போல்,
நின்றவிவ் வீரரை யொன்றிய மனைவியர்
உற்றார் பெற்றார் நட்டா ரென்றிப்
படியே பரவுமே பாடியெலாந் துயரம்!-(சற்று நிற்க)
என்னை யென்மதி யிங்ஙன மடிக்கடி
15.யென்னையு மெடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ !
மன்னவர்க் காக மாள்வ திவர்கடன்.
மன்னவ னென்போன் மதியெல் வலியோன்.
அன்றியும் பலநா ளாகநம் அன்னந்
தின்றிங் கிருந்திவர் செய்ததென்? அவர்தம்
20.உடன்பா டிதுவே. கடம்பா டாற்றுங்
காலம் விடுவதார்? மேலு மியல்பாய
பலபெயர் துக்கப் பட்டா லன்றி
யுலகி லெவரே யொருசுக மணைவார்?