பக்கம் எண் :

மனோன்மணீயம்
99

இயல்பிது வாயி னிரங்க லென்பயன்?
25.வயலுழு முழவோர் வருத்தமுங் குனிந்திருந்து
ஆடை நெய்வோர் பீடையும் வாகனந்
தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி
யுலகிடை வாழா தோடுவ ரோபிறர்?
அலகிலா மானிடர் யாவரு மவரவர்
30.நலமே யாண்டும் நாடுவர். மதிவலோர்
களத்தொடு காலமுங் கண்டுமீ னுண்ணக்
குளக்கரை யிருக்குங் கொக்கென அடங்கிச்
சம்பவஞ் சங்கதி யென்பவை நோக்கி
யிருப்பர் : நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர்.
35.நண்ணா ரிதுபோல் நலமிலா ஐயம்.
எண்ணார் துணிந்தபின் ; பண்ணார் தாமதம்.
ஏழைய ரலரோ இரங்குவ ரிங்ஙனம்?
கோழையர் ! எங்ஙனங் கூடுவார் இன்பம்?
வந்தன னஃதோ மன்னனும். -

(ஜீவகன் வர.)

40.வந்தனம் வந்தன முன்றிரு வடிக்கே.

(க)

(நிலைமண்டில ஆசிரியப்பா)


ஜீவகன்.குடிலா ! நமது குறைவிலாப் படைக
ளடையவு மணிவகுத் தானவோ?

குடில,

அடியேன்.

நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு?
சொன்னதப் படியென வுன்னினன்.

ஜீவ,

ஆமாம் !

45.அதற்கே னையம்?

குடில,

அவர்க்கது முற்றும்.

இதக்கே டென்றனர். ஆயினும் போயினர்.

(படைகள் வணங்கி.)


படைகள்.ஜயஜய ! ஜீவக வேந்த ! விஜயே !

குடில,அதிர்கழல் வீரரு மாசரு மீதோ
எதிர்பார்த் திருந்தன ரிறைவ!நின் வரவே.
50.நாற்றிசை தோறும் பாற்றினஞ் சுழல