பக்கம் எண் :

மனோன்மணீயம்
100

நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும்
நெய்வழி பருதி வைவே லேந்திக்
கூற்றின்நா வென்னக் குருதிகொப் புளித்து
மாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும்
55.உறையுறு குறுவா ளொருபுற மசைத்துக்
காற்றினு மிகவுங் கடுகிக் கூற்றின்
பல்லினுங் கூரிய பகழி மல்கிய
தூணி தோளில் தூக்கி, நாண் நின்று
எழுமொலி யுருமுபொன் றெழுப்பி யார்த்தவர்
60.கடிபுரி காக்குநின் காற்படை யாளர்.
இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக்
கருத்தும் விரைவு கற்குங் குரத்தாற்
பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு
விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே.
65.நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து
மம்மர் வண்டின மாற்ற மும்மதம்
பொழியும் வாரணப் புயலினம் தத்தம்
நிழலொடு கறுவி நிற்பது மழகே.
முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய
70.புரந்தான் கைப்படாப் பொருப்புகள் போன்ற
கொடிஞ்சி நெடுந்தே ரிருஞ்சிறை விரித்து
“வம்மின் ! வம்மின் ! வீரரே ! நாமினி
யிம்மெனு முன்னமவ் விந்திர லோகமுஞ்
செல்லுவம் ! ஏறுமின் ! வெல்லுவம் !” எனப்பல
75.கொடிக்கரங் காட்டி யழைப்பதுங் காண்டி. -

ஜீவ,கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும்.
உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ ! ஓ !

(படைகளை நோக்கி.)

வேற்படைத் தலைவரே ! நாற்படை யாளரே !
கேட்பீ ரொருசொல் ! கிளர்போர்க் கோலம்
80.நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே
பாக்கியம். ஆ ! ஆ ! யார்க்கிது வாய்க்கும்?
யாக்கையி னரும்பயன் வாய்த்ததிங் குமக்கே !