| | தாயினுஞ் சிறந்த தயைபூண் டிருந்ததும் தயமாந் தேவிக்குத் தீவினை யிழைக்கத் |
| 85. | துணிந்தவிவ் வஞ்சரை யெணுந்தொறு மெணுந்தொறும் அகந்தனி லடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவங் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையுங் கிளர்ந்தெழுந் தாடக் |
| 90. | களங்கமில் நும்முகங் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டன ளுவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின் ! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா ! |
| படைகள். | | தாம்பிர பன்னிக்கு ஜே ! ஜே ! |
| ஜீவ, | | ஒருதுளி யேனுநீ ருண்டுளீ ராயின் |
| 95. | கருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. “மக்காள் ! அருந்தி வளர்மின் ! நுமக்கு மிக்கோ ரில்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை யாகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக ! |
| 100. | அன்னியன் கைப்படா விந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடு மளவும் !” என் றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் |
| 105. | பார்த்தா லார்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! |
| ஜீவ, | | விந்தம் அடக்கினேன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? |
| படைகள். | | தமிழ்மொழிக்கு ஜே ! ஜே ! |
| ஜீவ, | | பழையோர் பெருமையுங் கிழமையுங் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி |
| 110. | நித்திரை வரும்வகை யொத்தறுத் துமது |
|
|
|