| | தொட்டில்தா லாட்ட,அவ் இட்டமாம் முன்னோர் தீரமுஞ் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி யிருகணுங் கண்ணீர் நிறையக் கண்டுயி லாதுநீர் கனிவுடன் கேட்ட |
| 115. | வண்டமிழ் மொழியால் மறித்திக் காலம் “ஆற்றிலம் ; ஆண்மையு முரிமையு மொருங்கே தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்? |
| ஜீவ, | | பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே யுலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று |
| 120. | “அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு ! |
| ஜீவ, | | கோட்டமி லுயிர்போ கூறீர், அன்ன நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்? |
| ஜீவ, | | சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நுந் திருவனை யார்களுஞ் சேய்களுங் கொண்ட |
| 125. | வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையுஞ் சுதந்தரக் கேண்மையு மொருங்கே |
| 130. | நிந்தைவஞ் சியர்செய வந்தநுங் கோபம் முற்று மியல்பே. மற்றுதன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடி னதற்கக் குறும்பா லெழுஞ்சின மிறும்பூ தன்றே ! உரிமைமே லாண்மைபா ராட்டார் சாந்தம், |
| 135. | பெருமையில் பிணத்திற் பிறந்தோர் சீதம். அந்தணர் வளர்க்குஞ் செந்தழல் தன்னிலும் நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ யன்றோ வானோர்க் கென்றுமே யுவப்பு ! |
|
|
|