| | வந்தவிக் கயவர்நுஞ் சிந்ததையிற் கொளுத்திய |
| 140. | வெந்தழற் கவரே யிந்தன மாகுக ! |
| ஜீவ, | | இன்றுநீர் சிந்து மிரத்தமோர் துளியும், நின்றுகம் பலவு நிகழ்த்துமே “இந்தப் பாண்டிய ருரிமை பாராட்டும் பண்பினர் ; தீண்டன்மின் திருந்தலீர் ! அவர்தஞ் செருக்கு. |
| 145. | சுதந்தர மவர்க்குயிர் : சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினு மிதனை.” எனமுர சறையுமே யெத்திசை யார்க்கும். இத்தனிப் போரினீ ரேற்றிடுஞ் காயஞ் சித்தங் களித்து, ஜயமா துமக்கு |
| 150. | முத்தமிட் டளித்த முத்திரை யாகி யெத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும் ! |
| ஜீவ, | | போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும் ! ஆ ! ஆ ! நோக்குமின் ! அனந்தந் தலைமுறை வருந்தனி மாக்கள், |
| 155. | தினந்தினந் தாமனு பவிக்குஞ் சுதந்தரந் தந்ததம் முன்னோர் நொந்தபுண் ணெண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர், என்றா லப்புண் ‘இறந்துகோட் டக்கது’ அன்றோ? அறைவீர். ஐயோ ! அதுவும் |
| 160. | புண்ணோ? புகழின் கண்ணே. எவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணந் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல. இவரெலாம் பிறந்தா ரென்பவோ ! |
| 165. | உதும்பர தருவி லொருகனி யதனுட் பிறந்திறு மசக மிவரிலுங் கோடி. பிறந்தா ரென்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி யின்றிதோ ! |
|
|
|