| | சுலபமாய் நுமக்கெதி ரணுகலால்,, துதித்துப் |
| 170. | பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையு மிணையிலாப் பெரும்புகழ் எத்தனை யாயிர மாயிரங் கூறிட் |
| 175. | டொத்ததோர் பங்கே யுறுமெனக் கெனவே யோடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள் ! நீடுபோர் குறித்தவண் நின்றோர் தம்முள் யாரே யாயினுஞ் சீராந் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் |
| 180. | சஞ்சல மெய்துவோ ருண்டெனிற் சாற்றுமின். வஞ்சக மில்லை.என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமா யின்றிருத் திடுவம். திண்ணம். உத்தம மாதர்க ளுண்டுமற் றாங்கே |
| 185. | யெத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். |
| படைகள். | | இல்லை ! இல்லையிங் கத்தகைப் புல்லியர் ! |
| ஜீவ, | | குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதா மெனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. |
| படை,்தலைவர். | | இல்லையெம் மிறைவ ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். |
| யாவரும். | | இலையிலை ! இலையே ! |
| ஜீவ, | | நல்லதப் படியே. நாமே நுஞ்சுய நாட்டினல் லுரிமைபா ராட்டும் பெரிய |
| 195. | மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின் ! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள் ! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநந் தாய்மனோன் மணியே. |
|
|
|