ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம் இடம் : கன்னிமாடத் தொருசார். காலம் : யாமம். | சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி யிருக்க. | (நிலைமண்டில ஆசிரியப்பா) |
| கிழவி. | | எதுக்குமிவ் விளக்கு மிச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில். |
| முதற்றோழி. | | என்னடி கிழவி! சொன்னா லறிகிலை. போம்வழி யறியோம்! போமிட மறியோம்! |
| 5. | மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி! காது மில்லை! கண்ணு மில்லை! ஏது மில்லை! ஏனுயி ரிருப்பதோ! |
| கிழவி, | | கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு! |
| 10. | படும்போ தறிவை! இப் படியே பண்டு முன்னொரு சண்டையி லுன்னைப் பெறுமுன் ஓடினோம் - |
| முதற்றோழி. | | போடீ! உன்கதை யறிவோம். | | | (கிழவி போக) |
| | சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே! | | | (நகைக்க) |
| 2-ம் தோழி. | | அம்மணியென் செய்தாள்? அக்காள்! அதன்பின். |
| 15. | ‘அப்படி யரசன் மீண்டான்.’ செப்பாய்! |
| முதற்றோழி. | | எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபா டய்யோ! அத்துயர் தெய்வமே யறியும்! மன்னவன் வாசல் கடந்தா னெனுமுனந் தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும் |
| 20. | அருகுள செவிலியும் யானுமாய் விரைவில் தாங்கினோம், பாங்குள அமளியிற் சேர்த்தோம். மூச்சிலை ; பேச்சிலை ; முகமெலாம் வெயர்வை. |
|
|
|