| | இட்டகை யிட்டகா லிட்டவப் படியே. இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்! |
| 25. | தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி ஏங்கினோம், தியங்கினோம்;பாங்கிருந் தழுதோம். |
| 2-ம் தோழி. | | ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர பட்டபா டெதுவோ! கட்டம்! கட்டம்! |
| முதற்றோழி. | | விதியிது! அலதிது கதையிலு முளதோ? |
| 30. | நொந்தபுண் ணதனிலே வந்திடும் நூறிடி. தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து மகிழ்ச்சி காட்டினள், வந்ததித் தளர்ச்சி. மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய். |
| 2-ம் தோழி. | | எத்தனை வேதனை! எத்தனை சோதனை! |
| 35. | யாது மறியாட் கேதித் துணிபு? ஓதிய கட்டுரை யொருமுறை யினியும் நவிலுதி யக்காள்! |
| முதற்றோழி. | | நங்கைநன் மொழியென் |
| | செவியிடை யினியும் மணிபோல் திகழும்! அரசனை யடிபணிந் தொருசா ரொதுங்கி |
| 40. | நீக்கமி லன்பு மூக்கமுங் களிப்புங் காட்டிய மதிமுகங் கோட்டியே நின்ற தோற்றமென் கண்ணின் மாற்றுத லரிதே! “என்னோ இதற்கும் யோசனை யெந்தாய்! கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா |
| 45. | நீதிநம் பரலெனில் நேர்வது ஐயமே. ஏததற் கையம்? இதுவிட் டடிமை பெயர்வது பெரிதல. பேருல கதற்குத் துயர்வரு மெல்லைநந் துயர்நோக் குதலோ பெருமை! அண்ணிதே முனியிடம்! கருதிய |
| 50. | பிரிவோ ஒருதினம்! குருவுந் தந்தையுஞ் சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப் பாதா தரவே போதா தோதுணை? ஆயினு மத்தனை யவசிக மாயின், ஆகுக வாஞ்ஞைப் படியே! தடையிலை. |
|
|
|