| 55. | அன்னையு நின்னை யன்றிவே றறியேன். உன்னதே யிவ்வுடல். உன்திரு வுள்ளம் உன்னிய படியெலா முவப்பச் செய்குவன். அடிமையின் கவலையா லரசர்க் கியல்பாங் கடமையிற் பிறழுங் கலக்கம் விலக்குவை! |
| 60. | அன்பாம் உன்பா லைய! உன்மகள் வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.” |
| 2-ம் தோழி, | | மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ! இதுவெலாங் காணவோ எழுதினன் பிரமன்? |
| முதற்றோழி. | | எதுவெலாங் காணவோ இருப்ப திக்கண்? |
| 2-ம் தோழி. | 65. | என்செய் கின்றன ளிப்போ தேழை? |
| முதற்றோழி. | | வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! ஏதோ வெழுது கின்றனள். வாணி கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல். |
| 2-ம் தோழி. | | நீரா டினளோ விந்நிசி? |
| 70. | எழுந்து வாசநீ ராடி முன்சுரத் தழுந்திய வன்றுதா னணிந்தவெண் பட்டினைக் கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி, அன்றிரா வணிந்தமுத் தாரமு மணிந்து, |
| 75. | நின்றுதன் னிலையெலாம் ஆடியில் நோக்கி, ‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி! அன்றுபோ லன்றோ வின்றென் னிலைமை!’ என்று சிறுமுறு வலித்தனள். என்சொல! உருவமு முடையு முரையு நடையுஞ் |
| 80. | சருவமும் பாவனை பண்ணியும் -(அழ) | | | (மனோன்மணியும் வாணியும் வர) |
| | வந்தனள். காணுதி. வாணியும் பின்னுளள். மறைகுவ மவ்வறை. வருகவிவ் வழியே! | | | (தோழிமார் போக) |
|
|
|