பக்கம் எண் :

மனோன்மணீயம்
176

மெனப்பட்டது. தெக்கணம், தெக்ஷணம், தென்னிந்தியா (=சென்னை மாகாணம்.) திரவிட நாடு - தமிழ்நாடு. குணகடல், குமரி, குடகம், வேங்கடம் எனும் நான்கு எல்லைக் குட்பட்ட நாடு. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் என்னும் ஐந்து திராவிட மொழிகள் வழங்கும் இடமாதலின் திரவிட நாடு என்று சொல்லப்படும். நறும் - வாசனை, இனிமை.

தரவு. 2. அளித்து - காத்து. துடைத்தல் - அழித்தல். எல்லைஅறு - வடிவு, குணம், செயல் முதலியவற்றில் ஒரு எல்லையற்ற, முன் இருந்தபடி - தன் வடிவும் மூப்படையாமல் முன்னிருந்த நிலைப்படியே, களி தெலுங்கு - மகி்ழ்தற்குக் காரணமாகிய தெலுங்கு. கவின் - அழகு. உதரம்-வயிறு. உலக வழக்கு - உலகத்தவரால் வழங்கப்படுதல். வழங்குதல்-பேசுதல். திறம்-பெருமை. வாழ்த்துதும்-வாழ்த்துவோம் ; தும் விகுதிபெற்ற தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று.

கன்னட முதலிய மொழிகளுக்குத் தமிழே தாய்மொழி யென்பது பல மொழியாராய்ச்சியாளர் துணிபு. ஆரியம்-வடமொழி ; விந்திய மலைக்கும் இமய மலைக்கும் இடையிலுள்ள ஆரியவர்த்தத்தில் வாழ்ந்த ஆரியர்களுக்கு உரித்தா யிருந்த மொழி.

உலக வழக்கு அழிதலாவது : இப்பொழுது எந்த நாட்டிற்குஞ் சொந்த மொழியாக வழங்காமை. இதனாற்றான் தேவபாஷை என வழங்குவது போலும்.

கன்னட முதலியன ஒன்று பலவாதல் பழங்கன்னடம், புதுக்கன்னடம், அச்ச தெலுங்கு, மிசிர தெலுங்கு என்ற பாகுபாட்டுடன் விளங்குதலால்.

தாழிசை

தாழிசை எனினும் இடைநிலைப்பாட்டு எனினும் ஒக்கும். நாற்சீரின் மிக்கு பல சீரான் வந்து அடியிரண்டாய் ஈற்றடி குறைந்து வருவன குறட்டாழிசை யெனப்படும்.

தாழிசை 1. குடமுனி - குடத்திற்றோன்றிய முனி, அகத்தியர். கரை-எல்லை. தொடு கடல்-சகர புத்திரரால் தோண்டப்பட்ட கடல், சாகரம். புகழாமே-கீர்த்தியாமோ, ஏகாரம் எதிர்மறைப் பொருளது. தமிழ் கடலினும் பெரிதென்றபடி, கடல் குடித்தது :- இந்திரன் வேண்டுகோட்படி அவன் பகைவனாகிய விருத்திராசுரனைக் கடலினின்றும் வெளிப்படுத்தும் பொருட்டுக் கடனீரைத் தம் ஒரு கையால் முற்றும் பருகிப் பின் உமிழ்ந்த வரலாற்றினால் விளங்கும். சகர புத்திரர் கடல் தொடுதற்குக் காரணம் அசுவமேத யாகம் செய்ய லுற்ற சகர சக்கரவர்த்தியின் வேள்விக் குதிரையை இந்திரன் பாதாள லோகத்திற் கொண்டொளித்தமை. குருவாவார் முருகக் கடவுளும், சிவபெருமானும்.

தாழிசை. 2, அரனார்-சிவபெருமான், ஆர் சிறப்பு விகுதி. உரை இழந்து - பேச்சொழிந்து. விழிப்பாரேல் -விழிப்பவராயினா ரென்றால், இலக்கணம்-இலட்சணம், அரியது-அறிதற்கு அருமையானது. ஒரு பிழை-மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை செயற்கைபற்றியே மணம் உண்டென்று 'கொங்குதேர் வாழ்க்