பக்கம் எண் :

மனோன்மணீயம்
178

கொண்டார் போலும். கரவா-கரவாத, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ; கா, பகுதி.

தாழிசை. 5. கடையூழி- ஊழிக்கடை, கற்பாந்தகாலம். தனிமை-தனித்திருக்குந்தன்மை, கழித்தல்-தீர்த்துக் கொள்ளுதல், அம்பலத்துள் உடையார் - பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கின்ற தலைவரான சிவபிரான். வாசகம்-திருவாசகம்.

வாசகத்தில் ஒரு பிரதி கருதியதாவது : - அந்தணர் வேடம் பூண்டு வந்த அம்பலவாணர், மாணிக்கவாசகர் பாண்டி நாட்டிலிருந்து பாடிய வாசகப் பாடல்களை மீண்டுங் கேட்கும் வேட்கையினால் சிதம்பரத்தில் வைத்துப் பாடக் கேட்டுப் படி (பிரதி) யெடுத்த தன்மை. வாசகம்-வாசகத்தாலாகிய நூலுக்குக் கருவியாகு பெயர். கடையூழி வருந்தனிமை கழித்தல் என்றது - சிவபிரான் தம் திருக்கையால் எழுதியருளிய திருவாசக ஏட்டுப்பிரதி, யாவும் அழியுங் கடையூழிக் காலத்திலும் தான் அழியாது சிவபெருமானுடன் அமாந்திருந்து அவர் தனித்திருக்குந் தன்மயை நீக்கித் துணைபுரிவது.

தாழிசை. 6. இலகும் - விளங்கும். நலம் - அழகு. வியஞ்சனம் - அறிகுறி. இச்செய்யுளில் சங்கச் சிறுபலகை தமிழுக்கு உவமம் செய்கையால், சங்கப்பலகை கற்றறிந்தார் தகுதிக்கேற்ப இடங்கொடுத்து விளங்குவது போலத் தமிழும் நூலாராய்ச்சியாளர் ஒப்பத்தக்க முறையில் சிறந்த நூல் வடிவில் விரிந்து ஓங்கும். சங்கப் பலகை இரண்டுசாண் சதுர வடிவினது.

தாழிசை. 7. இருவிழி - கலைமளின் இருவிழிகள். இவை வடமொழி தென்மொழி என்பன. இவற்றுள் தென்மொழி வலவிழியோ, வடமொழி வலவிழியோ என்பதுவே சொற்போருக்கு இடமாகுங் கூற்று. இதனுண்மை அடுத்த இரண்டு தாழிசைகளால் முடிவுபெறும். கெடுவழக்கு - கெடுதி பயக்கும் பேச்சு. கெடுவழக்கு - வினைத்தொகையுமாம். கிழக்கொடு மேற்குணரார் (1) கிழக்கு மேற்கு என்ற திசைகளை யறியார் (2) ஒன்று மறியார் (3) கீழ்மை மேன்மை அறியாதார்.

தாழிசை. 8. வீறு-வேறு எவர்க்குமில்லாத சிறப்பு, பெருமை, குணதிசை யறியார் - கீழ்த்திசையின் பெருமை யறியாதவர்கள். குணதிசை - நன்மையான வழி என்பது தொனி. கலைமகள் - கல்விக்குரிய பெண் தெய்வம். இச்செய்யுளில் குணதிசை யறியாரே கலைமகளின் இருவிழிகளில் வடமொழியை வலவிழி யென்ற குறிப்பாரென்று கூறியிருத்தல் காண்க. அத்தகையார் குணதிசையறியாதவரே. குணதிசை, குணக்கு+திசை. குணக்கு - கிழக்கு.

தாழிசை. 9. பூர்வதிசை - கீழ்த்திசை, பழையநிலைமை என்பது தொனி. மதியுடையார் - அறிவுடையார். கலைமகள் கிழக்கு முகமாக இருக்கின்றதை அறிந்தவர்கள் தென்மொழியே வலக்கண் என்பதை ஐயுற மாட்டார்கள் என்பதாம்.

தாழிசை. 10. பத்துப்பாட்டுஆதி - திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்கள் அடங்கிய சங்கத் தமிழ்நூல்கள். மனம் பற்றினார் - கருத்து ஊன்றியவர். எத்துணையும் - எவ்வளவும், துணை - அளவு. இலக்கணம் இல்-பொருளிலக்கணத்துக்