பக்கம் எண் :

மனோன்மணீயம்
179

குப் பொருந்தாத. பத்துப்பாட்டு - தமிழுக்கே உரிய ஒழுக்க முதலியவற்றை இனிது புலப்படுத்துவதோடு மலை, கடல், நாடு, நகர், சிறுபொழுது பெரும்பொழுது முதலியவற்றை உள்ளவண்ணமே கூறி இன்பம் பயக்கும் நன்னெறி யுடையது. இத்தகைய இயற்கை வருணனைகளால் மனத்தை மகிழ்விக்கும் நூல் வடமொழியில் இன்றென்பதே குறை என்ற குறிப்பாகும்.

தாழிசை. 11. மறுஅற - (ஐயந்திரிபுகளாகிய) குற்றமில்லாத படி. உள்ளவரோ - எண்ணுவார்களோ. மனுஆதி - மனுமுதலிய வடமொழி நீதிநூல்கள். ஒரு குலத்துக்கு ஒரு நீதி - ஒவ்வொரு வகுப்புக்கு ஒவ்வொரு வகையான ஒழுக்கம் ; அதாவது மக்களுள் பலவகுப்புக்களைப் பகுத்து உயர்வு தாழ்வு கற்பித்து உயர்வு தாழ்வுக்குத் தக நடுநிலையின்றி ஏற்றத்தாழ்வான முறைகளை ஒரே வகைக் குற்றத்திற்கு விதித்தல். திருக்குறளில் இத்தகைய வருந்தத் தக்க நடுநிலை பிறழ்ந்த முறைகள் கூறப்பட்டிலவென்பது தேற்றம்.

தாழிசை 12. கரைத்து - உருகச் செய்து. மலம் கெடுக்கும் - மும்மலத்தை யொழிக்கவல்ல. கனம் சடை என்று - கனமென்றும் சடையென்றும் உருவிட்டு.

"திருவாசகத்திற்கு உருகாதார்
ஒருவாசகத்திற்கும் உருகார்"

"வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க்காண்கிலேந்

திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்து நீர் பாய
மெய்ம்மயி்ர் பொடிப்ப விதிர் விதிர்ப் பெய்தி

யன்ப ராகுன ரன்றி
மன்பதை யுலகில் மற்றைய ரிலரே"

என்ற (நால்வர் நாண்மணிமாலை) அடிகளின் கருத்து மனங் கரைத்து என்பதிற் குறிக்கப்பட்டது. மும்மலம் ஆணவம், மாயை, கன்மம். இவற்றைக் கெடுப்பது திருவாசகம். மாண்டோர் - மாட்சிமைப்பட்டவர் மாண் - பகுதி. கங்கிதை பதம் கிரமம் சடை, கனம் வருணக் கிரமம் முதலியன வேதத்தின் மூல பாடம் ஒருசிறிதும் பிறழாதிருத்தலைநோக்கி ஏற்பட்டவை. பொருட்பயன் கருதியாமையாதவை. இவற்றுள் கனம், சடை என்பன வேதத்தை மொழி மாற்றி உருவிட்டுக் கூறும் வகை. கனம் - வருந்திப் படிக்க வேண்டுவதாயுள்ள முறை, சடை - சடைபோற் பின்னிக் கூறும் முறை.

தனிச்சொல் :- என ஆங்கு - என்று இவ்வாறாக. தனிச்சொல் எனினும் விட்டிசை, கூன், தனிநிலை எனினும் ஒக்கும்.

ஆசிரியச் சுரிதகம்

சுரிதகம், எனினும் மடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் எனினும் ஒக்கும். குனிதிரை நீ்ர்ச்சுழிபோல நின்று சுரிந்திறுவது சுரிதகம் ; அதாவது சுருக்கிக் கூறுவது.

சுரிதகம் - நிற்புகழ்ந்து - உன்னைப் புகழ்ந்து. நெடுந்தகை - பெருமைக்குணம். பழம்பணி - பழைய அணி. நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம், மேய - பொருந்திய. மீக்கௌ - மேம்பட. வெள்ளியதெனி