பக்கம் எண் :

மனோன்மணீயம்
180

னும் - வெள்ளியாலாகியதாயினும் (சாரமற்ற தாயினும்). ஒள்ளிய - ஒளிபொருந்திய. சிறுவிரல் அணி - சிறுவிரலில் அணியப்படும் ஆழி. கொண்மதி - கொள்வாய் ; மதி - முன்னிலையசை. கொடுமலையாளம் - என்றது கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் மலாடு என்ற பெயருடன் மலையாளம் ஒன்றாயிருத்தலால், இந்நூலாசிரியர் வாழும் நாடும் செந்தமிழுக்கு உரியது அன்றென்று சாதுரியமாக அவையடக்கம் உரைத்தாகும். இச்செய்யுளில், தமிழ்த் தெய்வத்தின் மைந்தர், என்றது தமிழ் பயிலுவோரை. தமிழ்த்தெய்வத்துக்கு ஆபரணம் என்றது தமிழ் நூல்களை. பழம் பணி புதுப்பிப்பவர் - பழைய நூல்களைப் பிழையறப் பதிப்பித்து வெளியிடுபவர். புதுப்பணி செய்பவர் - புதிதாக நூல்கள் எழுதுபவர். கடையேன் - பிற்பட்டவன் என்பதோடு தாழ்வுடையவன் என்றும் பொருள் தருவது. கொண்மதி என்றதை மதிகொள் என மாறி இயைத்து அறிவில் ஏற்றுக் கொள் என்றலும் ஆம்.

நேரிசை வெண்பா. அமைய - தக. ஆட்டும் - ஆட்டுவிக்கும். நீ சுமை பொறுப்பது எவன் - நீ பாரம் தாங்குவது என்ன காரணத்தால். நயந்தால் - விரும்பினால். ஆடுவம் - ஆடுவோம். நாணம் அவம் - வெட்கம் கொள்ளுதல் வீண்.

இந்நாடகத்தைச் செய்ய நினைத்த மனம் சுமை தாங்கமாட்டது திகைப்பதை அறிந்து, கடவுள் திருவருளால் யாவும் நடைபெறவிருக்கும் அதற்கு, மாறுபடக் கருதி வருந்துதல் வீண் என்று தேற்றியவாறு.

பாயிரவுரை

முற்றிற்று.