90. வெருவுவர் - அஞ்சுவர். பொருது - போர்செய்து. 91. உள்ளற் பாற்றே - கருதுந் தன்மையதோ. 92. புரை - குற்றம். 98. ஆயற் பாற்றது - ஆராயத்தக்கது. 99. வாயில் - வழி. 107. சேடியர் - தோழிமார். 110. சிவிகை (வடசொல்), - பல்லக்கு, சின்னம்-குறி, அடையாளம்;-(வடசொல்) திருச்சின்னம். 116. [புராணம் - பழங்கதை, வெறுங்கற்பனை. ] 117. படிறு - வஞ்சகம். 118. உவர்த்து - வெறுத்து. 121. விரசமாய் - வி-ரசமாய், சுவையற்றதாய். 123. துனி - வெறுப்பு. 126. பரிவு - அன்பு, இரக்கம். 132. கமலை - கமலத்தி லிருப்பவள். கலைமகள் முன்னர்க் குறிக்கப்பட்டிருப்பதால் ஈண்டு இலக்குமி. 129-135. மனோன்மணியின் உயிர் உடல்முதலியனவாக அன்பு அழகு முதலியனஉருவகிக்கப்பட்டுள்ளன. பாண்டியன்தொல்குலம் மதி (சந்திரன்) ஆகவும்,அதிற்றோன்றிய மனோன்மணியை மதியிற்றோன்றிய மதி யென்னாது மதி தோன்றியபாற்கடலிற் றோன்றிய மதி என்றார். 138. வன்னி - நெருப்பு. 139. அவிசு - அவி, அவிழ. 142. வெய்துயிர்ப்பு - பெருமூச்சு. 146. புங்கவர் - உயர்ந்தவர். 147. மணி - மனோன்மணி. [காவியங்களுக்குரிய மலை, நதி, அரண் இவற்றின் வருணனை இக்களத்தில் ஒருவாறு வந்தமை காண்க. ] முதல் அங்கம் இரண்டாங் களம் ஆசிரியத் தாழிசை யாவது மூன்றடியாய்த் தம்முன் அளவொத்து வருவது. தாழிசை 1. [சுடுகணை தூர்ப்பவன் - மன்மதன்]கணை-அம்பு. தா-2. வடு - மாறாத்தழும்பு. தா-4, கடுவுண்ட கண்டர் - அமுதமெடுக்கத் திருப்பாற் கடலைக்கடைந்த காலத்து உண்டாய நஞ்சுண்ட கண்டத்தை யுடையவர், திருநீலகண்டர். கடு-நஞ்சு, விடம். தா-5, பலி (வடசொல்) - பிச்சை. உடைந்தான் - தோற்றான். தெருவிற் பலிகொண்டது என்றது, தாருகா வனத்துச் செருக்குற்ற முனிவர்களின் செருக்கை யழிக்கும் பொருட்டுச் சிவபெருமான் கங்காள நாதராகச் சென்று பிச்சை யெடுத்தமையைக் குறிக்கும். தா-6, காத்தல் மறைதல். [2,4,6 தாழிசைகள் காம தகனனுடைய (அர்த்தநாரீசத் தன்மையை) பெண்ணொரு பாதியாகுந் தன்மையைக் குறிப்பிக்கின்றன.] இத்தாழிசைகளிலிருந்து வாணியின் காதலனாகிய நடராசன், காதலால் அரையுருவாய் மெலிந்திருக்கின்றானென்றதும், மனோன்மணி காதற் சுவை யறியாதவள் என்பதும் விளங்கும். 4. [மன்றலு மானதுபோலும் - மணந்த பின்னர் நாயகன் பேர் நவிலாமை வழக்கானதால்.] வார்குழல்-நீண்ட கூந்தல்;அன்மொழித்தொகை. குழல் - கூந்தலைக் கட்டுமுறை யைந்தில் ஒன்று. 7. இச்சகத்து - (1) இச்சையுடன், (2) இந்த பூமியில், 12. [சிவந்த - நாணத்தால் சிவந்த, C.F. Blushing.]கபோலம் நுவன்று-கன்னம் சொல்லி, நுவல் - பகுதி.
|