பக்கம் எண் :

மனோன்மணீயம்
185

17. அழுக்காறு - பொறாமை, அழுக்கறு என்னும் பகுதி நீண்டு தொழிற் பெயராயிற்று.

25. சினகரம் - கோவில், மனோகரம் - மனத்தைக் கவர்தல்.

26. உய்ப்பினும் - செலுத்தினும். உய் - பகுதி.

29. முசிப்பு - முடிப்பு.

32. சிட்ட - கற்றறிவுடைய.

33. புரந்தான் - இந்திரன், கரந்து - மறைந்து.

36. ஒவ்வும் - பொருந்தும்.

39. கைப்பிள்ளை - சிறு பிள்ளை, கை - சிறுமை.

39. [இதன்பின் வரும் வெண்பா, உண்மைத் துறவியாகிய முனிவர் மேல் குடிலன் அவமே பொருளாசை ஆரோபித்ததைப் பழித்து நாராயணன் செவியறிவுறுத்தும் துறையாகக் கூறும் கூற்று.]

கோற்றொடி - அழகிய வளையலணிந்த பெண்.

பார்த்திபன் - அரசன், பாரை விளங்கச் செய்பவன்.

51. அறத்தாறு - அறநெறி.

53. அரந்தை - துன்பம்.

56. வதுவை - திருமணம்.

59. சீலம் - ஒழுக்கம்.

60. சாலவும் - மிகவும்.

64. இடியேறு - ஆணிடி, பேரிடி.

65. அடு - கெடு, கொல்.

70. தொழும்பு - அடிமை.

73. வியர்த்தம் (வடசொல் - வி + அர்த்தம்) - வீண், பயனற்றது.

77. நேராள் - உடன்படாள்.

84. திரைத்தது - சுருங்கிற்று.

87. வாழ்தும் இவ்வயின் - இவ்விடம் வாழ்வோம்.

95. [இவ்வரிக்குப் பின்வரும் வெண்பாவில் 'சோற்றதற்கா' என்னும் தனிச்சொல் சகடனைக் குறிக்குங்கால் 'சொற்றதற்கா' என்பதின் நீட்டல் விகாரமாய் அவனது தவறா மொழியையும் சுட்டி நிற்கின்றது.]

104. பொருவரும் - ஒப்பற்ற,

110. பூவை - நாகணவாய்ப்புள்.

117. பாற்கல் - கூழாங்கல்

129. இதம் - நன்மை, இனிமை.

133. [இராச்சிய தந்திரத்து - இராச்சிய காரியங்களில்.]

149. நளினம் - தாமரை

152. குமுதவாய் விண்டு - செவ்வாம்பல் மலர் போன்ற வாயைத்திறந்து.

153. குயிலின் மிழற்றி - குயில் போற் பேசி.

156. மந்திரம் - வீடு.

158. கண்படுமெல்லை - துயில் கொள்ளும்போது, தூங்கும் போது.

163. நாலி - முத்து.

165. கட்டழல் - கண் + தழல் - நெருப்பு.

166. ஒல்கும் - தளரும்.

169. அயினிநீர் - ஆலத்தி நீர். பூதி-விபூதி, திருநீறு.

173. இழுது - நெய்.

178. கங்குல் - இருள்.

180. சிரசிரா - சிரசு + இரா - தலையிருக்க மாட்டா, தலைத் தண்டனை வரும்.

182. நிமித்திகர் (வடசொல்) - சோதிடர், குறி கூறுவோர்.

183. பெண்ணையந்தார் சூடிட - பனம்பூ மாலையைச் சூடும்படி.

184. பெண்ணை - மகளை. அம்தார் சூட்டென - அழகிய மாலையைச் சூடும்படி செய்யென, அதாவது, வஞ்சி யரசனுக்கு மணம் செய்து கொடுமின் என.

203. அங்கணம் (வடசொல்) - முற்றம்.

[இக்களத்தில் கனாக்கண்டு, காமங்கொண்ட மனோன்மணியின் காம சுர வருணனை ஒருவாறு வந்தமை காண்க.]