பக்கம் எண் :

மனோன்மணீயம்
186

முதல் அங்கம்

நான்காம் களம்

4. அரும்பிய அம்புலி - தோன்றிய சந்திரன்.

6. உறுத்தும் - வருத்தஞ் செய்யும். ஒறுத்து - தண்டித்து.

7. சூல் - கருப்பம்.

12. பஞ்சவனம் - பஞ்ச வர்ணம் - ஐந்து நிறம்.

13. பிசிதம் - வேம்பு.

14. வானவன் - தேவன்.

16. சேயது - சேய்மையிலுள்ளது, தூரத்திலுள்ளது. போந்தை - பனைமரம்.

12-22. [இவ்வரிகளில், பஞ்சவன்-பிசிதம்-வானவன்-போந்தை என்ற மொழிகள் முறையே பாண்டியனையும், அவனது மாலையாகிய வேம்பையும், சேரனையும், அவனது மாலையாகிய பனம்பூவையும் குறிப்பித்து நிற்பதால் பாண்டியன் மகளாகிய மனோன்மணி சேரனது பேரழகு கண்டு மயங்கி யிச்சை யுறுவதை யுணர்த்த அறிகுறியாக வந்த ஒருவனாக் காட்சி தொநியருத்தமாக் கூறியதாயிற்று.]

27. துப்பு - பவளம்.

30. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கின்ற,போன்மே - போலுமே, போலும் என்பது போன்ம்எனத்திரிந்தது, மகரக் குறுக்கம்.

37. பரிதி - சூரியன்.

42. மிகை - துன்பம்.

57. அழல் - அழுதல்.

61. விழுமம் - துன்பம்.

62-63. மின்ஏய் மருங்குதல் - மின்னலை ஒத்தஇடை.

65. உகுத்து-சிந்தி, வம்பு -புதுமை, வீண்.

69. நச்சியது - விரும்பியது, நச்சு-பகுதி.

73. விநயமாய் - பணிவாய்.

82. கற்பனை - கட்டளை.

86. பாலை - பாலைவனம்.

89. தாரு - மரம்.

92, ஆறலை - வழிப்பறி.

115. சாடில் - வீழ்ந்தால்.

121. ['அரிவையர் பிழைப்பர்' என்பதை'எங்ஙனம்' என்ற ஜீவகன் சொல்லோடுசேர்த்துத் தன்மேல் சாட்டப்பட்டபிடிவாதத்தை அரசன் மேலேற்றி வாணி மறுமொழிகூறினான் என்க.]

131. மாற்றலர் - பகைவர்.

148. மண்ணான் - கழுவான்.

152. பணி - நகை.

169. புளியம் பழமும் தோடும் போலாமென்பது,ஒன்றிற்கொன்று பற்றற்ற தன்மை யுணர்த்துவது.

180. முருகு - தேன், மணம்.

183. நிசிதம் - கூர்மையான.

194. துனி - வருத்தம்.

197. திருவாழ்கோடு - பொன்மகள் வாழு மெல்லை.

187-199. நிலவுலகிலுள்ள மற்ற முடிமன்னரை யெல்லாம் பயனற்ற திருகுகள்ளியும் கருவேல மரத்திற்குமாக வெட்டி யொழித்து, மன்பதை சுகத்தோடு வாழும்படி (தனது வெண்கொற்றக் குடையால்) நிழலளித்து, இன்னு மழியாத பகைவரெவரேனும் வந்தெதிர்த்தாலும் அவரது தலையை யறுத்துத் தள்ளும் வீரமே இலைகளாக விட்டும், புகழென்று சொல்லப்பட்ட எங்கும் மணமெடுத் தோங்குகிற நற்குணங்கள் பல பல பூக்களாகப் பூத்தும், துவக்குண்ட ஆன்மாக்களது துன்பங்களையும்படிக்குத் தனது உள்ளங் கனிகின்ற தண்ணளியே பழங்க