பக்கம் எண் :

மனோன்மணீயம்
187

ளாகப் பலந் தந்தும், தருமராச்சியமென்ற தனிப் பேர்கொண்ட செந்திரு வாழு மெல்லையாகிய சேரதேசத்தை யாள்வோனாகிய புருடோத்தம னென்னும் தன் னிகரில்லாத் தலைவனையன்றி, நினது கற்பகப் பூங்கொடியாகிய மனோன்மணி மணந்து சுற்றத் தகுந்த கற்பகத்தரு வேறொன்றுமில்லை என்பது.

202. இடுக்கண் - துன்பம்.

[இக்களத்தில் வாணியின் காதல் நிலைமை வாணியின் வாசகத்தால் வருணிக்கப்படுகிறது.]

முதல் அங்கம்

ஐந்தாங் களம்

1. சத்தி - வலிமை.

3. பெட்பு - விருப்பம்.

9. கற்றை - ஒன்று சேர்ந்தது.

19. அயர்த்தோம் - மறந்தோம்.

39. மாறன் - பாண்டியன்

40. இறுமாப்பு - செருக்கு.

47. [அரசனைப் போர்க்களத்தில் தானே சூதாகக் கொலைபுரிய உட்கொண்ட குடிலன் கருத்தை அவாய் நிலைப் பொருளால் இவ்வரி உணர்த்துகின்றது.]

50. உற்பவம் (வடசொல்) - தோற்றம்.

52. இந்து இரவி - சந்திரன் சூரியன், மதி கதிர்.

66. சுவானம் (வடசொல்) - நாய்.

67. குக்கன் (வடசொல்) - நாய்.

75. இணையறு - ஒப்பற்ற.

78. உதாரம் (வடசொல்) - தயானத்துவம்.

88. [புண்ணியம்போல - போலிப் புண்ணியமாக.]

99. மேதினி - உலகு.

[இக்களத்தில் குடிலன் துர்க்குணம் அவனது மொழிகளாலேயே விளக்கப்படுகிறது.]

கலித்துறை

நிதனம் - அழிவு.

தனு கரணம் - உடம்பு கருவி.

[முதலங்கம் முடிவில் வருங் கலித்துறை அவ்வங்கத்துள் நடந்த கதையைத் தொகுத்துக் கூறி, ஞானபரமாகப் பொருட்படுத்துகிறது. மதுரையாகிய கூடஸ்தநிலை தவிர்ந்த ஜீவகனாகிய ஜீவன் நெல்வேலியாகிய அன்னமயாதி பஞ்சகோச சரீராபிமானத்தால் குருவாசகமாகிய அருள்வழி விடுத்துக் குடிலனாகிய மாயா வசத்தனாய்த் துக்கத்திற் காளாகின்றான் என்பது குறிப்பு.]

இரண்டாம் அங்கம்.

முதற் களம்.

2. பொறையன் - சேரன்.

3. மருமான் - மருமகன்.

4. மன்றல் - திருமணம்.

9. மந்திரம் - ஆலோசனை, சூழ்ச்சி்.

1-9. இவ்வடிகளில் ஜீவக வழுதி குடிலனுக்குப் பயந்து சுந்தர முனிவர் தன்னிடம் கூறியவற்றைக் குடிலன் தனக்குக் கீழ்ப்பட்ட பதவியில் இருப்பவனா யிருந்தும் தன்னின் மேம்பட்டவனாகக் கருதி அவனிடம் கூறுகின்றான்.

12. பரிசு - தன்மை, விதம்.

14. அற்றம் - சமயம், காலம்.

19. காண்டகும் - பார்க்கத்தக்க (அழகு வாய்ந்த)

20. மாண்ட - மாட்சிமைப்பட்ட, மாண் - பகுதி.