பக்கம் எண் :

மனோன்மணீயம்
188

24. செய்வான் - செய்ய, வான் ஈற்று வினையெச்சம்.

28. அனந்தைப்பதி - திருவனந்தபுரம்.

29. மொழிப்பயன் - சொற்பொருள்.

33. கண்ணகல் ஞாலம் - இடமகன்ற பூமி. ஞாலம் - ஈண்டு இடவாகுபெயராய் பூமியிலுள்ளவரை யுணர்த்தும்.

29-39. இங்கு குடிலன் தனது மகனுக்கு மனோன்மணியைக் கொள்ளவும் பிறவரசர் தேடி வராத்திருத்தற்கு முபாயங் கொள்வான் போல், எளிய ஜீவகனை மணஞ் செய்ய முதல் முதல் பேசி வருத லிணங்கிய ஆடவரில் லுள்ளாரே யென்றும், ஆடவர் தேடிமன்றல் சாற்றுதல் தகாது என்றும் மெல்ல வரசனுக் குரைக்கின்றமை காண்க.

47. கொழுந்து - மணமுள்ள பச்சிலை, இங்கு மனோன்மணியைக் குறிக்கின்றது.

54. நேரார் - ஒப்பாகார்.

63. ஏதிலன் - அயலான்.

69. கடிபுரி - காவல் மதில்.

73. சூழ்ச்சித் துணைவர் - ஆலோசனைச் சபையினங்கத்தவர்.

75. [நன்செய் நாடு - நாஞ்சி நாடு, நாஞ்ச நாடு என்று இக்காலத்து வழங்குவர்.]

78. மருதம் - நானிலத்தில் ஒன்று. அது வயலும் வயல் சார்ந்த இடமும். நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும். மயங்கி - கலந்து.

80. மழலை - இளஞ்சொல். வண்டானம் - நாரை, புலர்மீன் - உலர்த்து மீன் (கருவாடு.)

81. ஓம்புபு - ஓம்பி, பேணி. நுளைச்சியர் - நெய்தல் நிலப் பெண்கள். குழை - காதணி.

83. இருஞ்சிறை - பெரிய சிறகு (கரிய இறகு).

84. அலக்கண் - துன்பம்.

80-84. [ நெய்தல் நிலத்தில் உலர்த்தப்படும் மீனை மருத நிலத்து வண்டானக் குருகு கவர, அதை ஓட்ட நுளைச்சியர் எறிந்த பொற்குழை கடற்கரையிலுள்ள புன்னை நீழ லுறங்கி அம்மலர்த் தாதுக்களால் பொன்னிறம் பெற்றுத் திரும்பி மருத நிலத்திற்குச் சென்ற எருமையின் மேலிருந்து சிறகுலர்த்தும் கடற் காக்கையை வருத்திற்று என்பது பொருள்]

85. கேதகை - தாழை.

87. தாது - மகரந்தம்.

85-87. நெய்தலுக்குரிய கைதை மலரின் நிழலைத் தனது பெடையென மயங்கிச் சென்ற மருத நிலத்துத் தாராக்குருகை ஏளனஞ் செய்து சிரித்த ஆம்பல் மலரின் வாய் நிறையத் தன் மலர்த்தாதினைக் கொட்டிக் கோங்குமரம் விலக்கும் என்பது பொருள்.

88. வால்வளை - ஒளி பொருந்திய சங்கு.

89. ஓதிமக் குடம்பை என்று உன்னுபு - அன்னத்தின் முட்டை என்று எண்ணி.

90. அடம்பு - நெய்தல் நிலக்கொடி.

93. காரா - எருமை, காரான் எனவும்படும்.

94. அலமுகம் - கலப்பை நுனி. தாக்குழி-மோது மிடத்து, அலமரும் - வருந்தும்.

95. ஊடல் - பிணக்கம்.

91-96. கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற மருத நிலச்சாலையில் எழும் பெரிய புகையானது நெருங்கி மண்டுதலினாலே வாடிப்போன நெய்தல் நிலத்துள்ள கொடிகளின் பசுந் தழைகள் தளிர்க்கும்படியாகப் புல் மேய்ந்து வீடுநோக்கிச் செல்லு மெருமையானது அப்புகை