பக்கம் எண் :

மனோன்மணீயம்
189

யைக் கன்றென நினைத்துத் தீம்பால் சுரந்து பொழியும். கொழுநுனி பூமியைக் கிண்டிக் கொண்டு போம்பொழுது துன்பத்தை யடைந்த ஆமையானது பரத்தியர் தம் நாயகன் மாரோடு கொண்ட ஊடலின் கண்ணே தாங்கள் கோபத்தோடு தங்கள் மார்பில் பூசியிருந்து வழித்தெறிந்த குங்குமக் குழம்பினிடை யொளித்துக் கொள்ளும்.

97. அன்றில் - ஒன்றில்லையேல் ஒன்றில்லாதது, இணைந்தே வாழும் பறவை.

98. நளி - பெருமை, கோட்பறை விளி - கொன்று கொள்ளுதற்கு இசைவாக அடிக்கப்படும் பறைக்கொட்டு முழக்கம்.

99. சாலி - நெல்.

100. பஃறி - ஓடம். நிரை - வரிசை.

99-102. அழகிய கிளைகளையுடைய மருத மரத்திலே வாழ்ந்திடும் அன்றிலானது நெய்தல் நிலப்பறை யோசையைக் கேட்டு இரா முழுதும் கண் துஞ்சாது. மூங்கிலென வளர்ந்த நெற்கதிர்க் குலையோடு கூடிய பயிரின் தாளினிடத்தே உப்புப் பாரமேற்றி நிறைந்த கப்பற் கூட்டத்தை (நங்கூரம் போட விசை வில்லாத பொழுது கப்பல் காற்றால் வேறுகரைக்கடி யுண்டு போகாது) கப்பற் கயிற்றினால் கட்டுவர்.

நெல் தாளில் கட்டுவாரெனக் கொள்க. இங்கு நெய்தல் நிலத்தில் உப்புப் பாரமேற்றி யிருக்குங் கப்பல்கள் மருத நிலத்திலுள்ள நெற்பயிர் மூட்டிலே கட்டப்படுதலானது இவ்விரு திணையினது சமீபத்தையும், கப்பலையும் பிணிக்கத்தக்க விதமாய் நெற்பயிர் மூடுகள் மூங்கிற் பண்ணை மூடுகள்போல ஆனையடிப்பட்டு நின்றதையுங் குறித்தபடி, இப்பெருமை பொருந்திய நஞ்சைநாடெங்கும் இரவும் பகலுந் தம் வாவொழிந்தாலும் மாறி வந்தாலும் மழையானது அவ்வப் பருவகாலங்களிலே பெய்தலாகிய தங்கடமையில் வழுவுதல் செய்யா. தப்பினு மென்றபடியால் வர வொழிதலும் மாறி வருதலுங் கொள்ளப்பட்டன. இத்தவறாப் பொருள் தவறினும் மழை தங்கடன் தவறாவென் றமையின் அவ்வப் பருவங்களில் காலமறிந்து பெய்யும் மழை குன்றா வெனப்பட்டது.

103. கொண்மூ - மேகம். கொள்கலம் - பொருளைக் கொள்ளக்கூடிய பாண்டம்.

105. மிடிதீர் - வறுமையைப் போக்குகின்ற.

106. முந்நீர் நீத்தமும் - கடல் வெள்ளமும். முந்நீர் - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மையுடையது;ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்று மூன்று நீரை உடையது எனினுமாம். நீத்தம் - நீந்தப்படுவது, நீந்து + அம். அம், செயப்படு பொருள் விகுதி.

111. ஓம் என ஓ இறந்து -ஓம் என்ற சப்தத்துடன் மதகுநீர் தாங்கும் பலகையைக் கடந்து.

110-112. அந் நாஞ்சி நாட்டின் ஒரு பக்கத்தில் கால்வாய்களினிடத்தே நீரானது விம்மியேறி மதகைத் தாண்டிப் பாய்ந்து வீழ்கின்ற வெள்ளமானது "ஓம்" என்ற ஓசையுடன் விடாது ஒலித்தலினாலே குடிலை மந்திரத்தின் தொனியே கேட்கும்.

113. இரணம் -உப்பு, உப்பளம்

114. பழனம் - வயல்.

115. தூமம் - புகை.

116. கவடி - சோவி.

117. அலவன் - நண்டு.

118. துகிர்க்காலன்னமும் - செம்பவளம் போன்ற கால்களுடைய அன்னப்பறவையும், புகர் - கபில நிறம், மங்கிய செந்நிறம்.