வளங்களையு மங்களிப்பள். வளங்களிப்படி யிருக்குமாயின் நான் என்ன சொல்லப் போகிறேன். 133. அடுபவர் - கொல்பவர். 134. பள் - ஒருவகைப்பாட்டு இசை. 138. கிணை - மருதநிலப்பாறை. 140. நீவு - தடவு. 143. உலப்பு - கேடு, உல - பகுதி. 144. பயிர்மயிர் - பயிராகிய மயிர்; உருவகம். 147. பாடை - பாஷை, மொழி. 147. [நன்செய் நாட்டில் இன்னும் தமிழே வழங்குகின்றது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் ஒருகால் நன்செய் நாட்டைப்பற்றி விவாதம் வந்தபோது அந்நாட்டில் வழங்கும் தமிழ் பாஷையைச் சான்றாகக் காட்டினதாக ஒரு கதையும் உண்டு.] 152. கண்டனன் - செய்தனன். 155. கிளத்தில் - சொன்னால். கிள - பகுதி. 159. ஒப்பரவு - இணக்கம் 160. அந்நியோந்நியம் - அடுத்தவரல்லாத தன்மை. மிக நெருக்கமானது. 171. ஆற்றலே ஆற்றல் - செய்வதே வலிமை. 172. அவாம் - விரும்பும், அவாவும் என்பது அவாம் எனத் திரிந்தது. 174. மன்னவை - அரச சபை. 172-178. தூதரிலக்கணம் கூறப்பட்டவாறு. 182. வென்றிவைவேல் - வெற்றியும் கூர்மையும் பொருந்திய வேல். 185. மேவலர் - பகைவர், மேவு - பகுதி. 191. நினதே - நின்னுடையதே. 203. ஏழை-(1) அறிவின்மை, (2) தனியனாந்தன்மை. இரக்கக் குறிப்பு. 210. இராச்சிய பரண சூத்திரம் - இராச்சிய பரிபாலனஞ் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சாசனம், பர்ணம் - தாங்குதல். 210-211. யார்க்கும் நீச்சே - எவர்க்கும் எய்க்காத ஆழமுடைத்தாயிருக்கின்றது. 215-219. மாதா பிதாக்களுக்குத் தெரியாமல் தங்களை மறக்கச் செய்து அவர்கள் ஒழுக்கங்களைவிட்டுத் திரும்பும்படி செய்யவல்ல சேவகமானது அவனிடத்தே யுண்டு. இச் சேவகத்தின் கண்ணே இவன் சித்தி பெறுவானோ மாட்டனோ என்பதைப்பற்றி சந்தேகம் வேண்டியதில்லை. அதினாலே, நெருங்கி யிருக்கின்ற கூந்தலையுடைய மாந்தரிடம் தூதுசெல்ல வேண்டியதற்குரிய வல்லமை யுண்டு. 223. இருக்கும் இருக்கும் - நாம் கூறியது வெற்றுரையன்றி உண்மையே என்க. 226. கால விளம்பனம் - காலத்தைக் கழித்தல். Delay is dangerous. 236. சிந்தனைசெய்து - யோசித்து. 239. சுரகுரு - தேவகுரு, வியாழன், பிரகஸ்பதி. பிரசுரன் - அசுரகுரு, சுக்கிராச்சாரி. 244. திருமேனி - மலைநாட் டரசனைத் திருமேனி யென்றல் அந்நாட்டு வழக்கு. 247. ஆஞ்சனேயன் - அநுமான், அஞ்சனாதேவியின் குமாரன். 253. தரளம் - முத்து. 260. அங்கை - உள்ளங்கை, அகம் + கை - அகங்கை. ஆடி - கண்ணாடி. 262-263. சுமித்திரை பயந்த புத்திரன் - இலட்சுமணன். சுமித்திரை தசரதன் மனைவி. 263. வீரவாகு - முருகக் கடவுளுக்குத் துணைவர். 268. ["புறங்குன்றி கண்டனையரேனு மகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து" என்னும் திருக்(28 அதி-7ம்) குறளைக் குறிப்பித்துக் குடிலனுடைய வஞ்சகத் தன்மையை நாரா
|