மனோன்மணீயம்
244

பொருளுடையதென்று துணியப்படுவதாயிற்று. இம்முறையில் சம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்னும் பாடலை எழுதிவிட்ட ஏடு வேகவதியாற்றில் எதிர்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு சென்று சோழவந்தானையடுத்துள்ள திருவேடகம் என்னும் இடத்தை யடைந்தது. தொடர்ந்து சென்ற குலச் சிறையாம் மந்திரி எடுத்துவந்து சம்பந்தர் வெற்றியைச் சிறப்பித்தனர். கூன்பாண்டியனாம் தென்னவனும் இச்செய்யுட் சிறப்பால் உடற்கூனும் உளக்கூனும் நிமிர்ந்து நின்ற சீர்நெடுமாறனாயினான்.

வாசகத்தில் ஒரு பிரதி கருதியது

திருவாதவூரராகிய மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராயிருந்து அவன் விருப்பப்படி பரிவாங்கி வரச்சென்ற திருப்பெருந்துறையில் சிவகுருநாதன் திருவருள்பெற்றுப் பாண்டியற்கு தண்டனைக்கு ஆளாயிருந்து பாண்டியனையும் ஆட்கொள்ளக் கருதிய சிவபெருமான் அருள் வழிபெருகிய வைகை வெள்ளநீரைத் தடுக்கச்செய்த அணைக்கு வந்தியின் பொருட்டு மண்ணெடுத்துப் பிட்டுண்டபிரானார் மகிழப் பெரும்பொருள் நிரம்பிய பாக்கள் பாடி மகிழ்வித்துவந்தனர். இவர் சிதம்பரத்திலெழுந்தருளியிருக்கையில் சிவபெருமான் பாண்டிய நாட்டில் இவரோடு முன் பழக்கமுள்ள ஓர் அந்தணனது வடிவத்தை எடுத்துவந்து இவரது அனுமதி பெற்று இவர் பாடிய திருவாசகத் திருப்பதிகங்களை எழுதினாரென்பது.

சங்கத்தார் சிறு பலகை

இது கடைச்சங்கத்துப் புலவர்களின் வேண்டுகோட்படி அவர்கட்கு மதுரைச் சோமசுந்தரக் கடவுளால் கொடுத்தருளப்பெற்றது. இப்பலகை இரண்டு சாண் அளவிற்கு சதுரமாயிருப்பது. கலைமகள் வடிவினராம் உண்மைப்புலவர் எத்துணைப்பேர் வந்தாலும் ஒவ்வொரு முழம் விழுக்காடு விரிந்து ஏறி வீற்றிருக்க இடங்கொடுப்பது. சங்கப் புலவர்கள் இதனால் தங்களுக்கும் மற்றைத் தமிழ்ப்புலவர்களுக்குங் கல்வித்திறத்திலுள்ள வேறுபாட்டை அளந்தறிய எளிதாயிருந்தது.

சாநவி வரலாறு

பகீரதன் தவப்பயனால் தேவலோகத்திலிருந்து வந்த ஒரு புண்ணிய நதியாகிய கங்கை வருகிற வழியில் சந்து முனிவர் செய்து கொண்டிருந்த யாகத்தை அழிப்பதாவதை யுத்தேசித்துத் தாம் அதனை யுட்கொண்டார். பின் பகீரதன் தன் மூதாதையர்களான சகரபுத்திரர்களை நற்கதி செலுத்தும் பொருட்டுக் கொண்டுவரப்படுதலின் அதனை விடுத்தருள வேண்டுமென்று வேண்டியதற்கேற்ப சந்து முனிவர் தம் காது (சந்து) வழியாக விண்