மனோன்மணீயம்
245

தமையின் சாநவி என்ற பெயரைப் பெறுவதாயிற்று. பகீரதனாற் கொடுத்து வரப்பட்டமையால் பாகீரதி யென்று வழங்கப்படும்.

காவிரி வரலாறு

காவிரி, அகத்திய முனிவர் கமண்டலத்தை கவேரகிரியில் விநாயகரால் கவிழ்த்து உற்பத்தி செய்யப்பட்டது. இந்நதியின் வளத்தினால் சோழநாடு புனல்நாடு எனப்படும். கவேர முனிவர் என்னுஞ் சிறந்த முனிவர் பிரமதேவரைக் குறித்த அருந்தவம் புரிந்து அவரருளால் விஷ்ணு மாயையைத் தம் புத்திரியாக அடைந்து முத்தி பெற்றனரென்றும், பின்னர் அக்கன்னி பிரமதேவர் கட்டளைப்படி நதிவடிவாகிப் பெருகி கவேரகன்னி, காவிரி எனப் பெயரேற்றனள் என்பது ஆக்கிநேய புராணம்.

இந்திரன் நந்தவனம் தழைக்கும் பொருட்டு அவன் வேண்டுகோட்கிணங்கிய விநாயகர் காகவடிவங்கொண்டு அகத்தியர் கமண்டலத்தைக் கவிழ்த்துப் பெருகச் செய்தார் என்பதும் ஆம்.

மன்மதன் நீறாயினமை

சிவபிரான் ஒரு காலத்துத் தம்மை யடுத்து ஞானநிலை யுணர்த்த வேண்டிய சனகாதி முனிவர் நால்வர்க்கும் கல்லால மரத்தடியில் தென்பால் நோக்கி ஞானநிட்டையிலிருந்தபொழுது, அதன் தாபத்தைப் பொறுக்கமாட்டாத பிரமன் முதலிய தேவர்களால் திருமாலின் மானத புத்திரனாகிய கருவேளாகிய மன்மதன் சிவபிரானிடம் அனுப்பப்பட்டனன். அவன் கைலையம் பருப்பதத்தையடுத்து யோகத்திலிருக்கும் சிவபெருமான் மீது பஞ்சமலர்ப்பாணங்களையும் செலுத்தினான். செலுத்தவே, யோகங் கலைவுற்ற சிவன் கோபத்தோடும் பார்த்தனன். நெற்றிக்கண்ணாற் பார்க்கப்பட்ட மதன் சாம்பரானான். பின் இரதியின் வேண்டுகோட்படி இரதிக்குமட்டும் உருவத்தோ டிருக்க அருள் செய்யப்பட்டனன்;மற்றவர் பார்க்கமுடியாத வடிவினனாதலால் அநங்கன் என்று அழைக்கப்படலானான்.

கடுவுண்ட கண்டர்

தேவர்கள் நரைதிரை யடையாதபடி திருப்பாற்கடலினின்றும் அமுதம் கடைந்தெடுக்கும்பொழுது அதிற்றோன்றிய பல பொருள்களில் ஆலகாலவிடமும் ஒன்று. இதைக் கண்ட தேவர்கள் யாவரும் பதைபதைத்து இறந்துவிடுவோமென் றஞ்சி, திருக்கயிலையி லெழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தார்கள். தஞ்சம் புகுந்தவர்க்கு அஞ்சல் அளித்து, ஆலாலசுந்தரரை அனுப்பி அவ் விடத்தை யெடுத்துவரச் செய்து தம் வாய்க்குட் போடுவாராயினர். பக்கமிருந்த பார்வதி தேவியார் பகிரண்டத்தைப் பாதுகாக்க உட்கொள்ளப்படும் நஞ்சு அந்தரண்டங்களை