பக்கம் எண் :

மனோன்மணீயம்
1

மனோன்மணீயம்

முதல் அங்கம்

முதற் களம்

இடம் : பாண்டியன் கொலுமண்டபம், காலம் : காலை.

சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க.

[நேரிசை ஆசிரியப்பா]


முதற்சேவகன்,புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின். சீரிதே.
2-ம் சேவ,அடியிணை யருச்சனைக் காகுங் கடிமல
ரெவ்விடம் வைத்தனை?
3-ம் சேவ,               ஈதோ ! நோக்குதி.
4-ம் சேவ, 5.அவ்விடத் திருப்பதென்?
3-ம் சேவ,               ஆம். பொறு ! பொறு !
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழு மோதையும்
மொய்திரண் முரசின் முழக்கு மவித்துச்
10.‘சுந்தர முனிவா ! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண்மின் !
2-ம் சேவ,முனிவர ரென்றிடிற் கனிவுறுங் கல்லும் !
4-ம் சேவ,எத்தனை பத்தி ! எத்தனை கூட்டம் !
எள்விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன் !
3-ம் சேவ,15. உனக்கென் கவலை? நினைக்குமுன் னேடலாம்.
முதற்சேவ,அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர் !