| | ஒருசா ரொதுங்குமின். ஒருபுறம் ! ஒருபுறம் ! |
| | (ஜீவகன் வர) |
| யாவரும். (தொழுது) | | ஜய ! ஜய ! விஜயீ பவரா ஜேந்திரா !! |
| | (சுந்தரமுனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர) |
| | ஜய ! ஜய ! விஜய ! தவரா ஜேந்திரா !! |
| ஜீவகன். | 20. | வருக ! வருக ! குருகிரு பாநிதே ! |
| | திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடி |
| | லருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ |
| | குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ |
| | யாதென வோதுவன்? தீதற வாதனத்து |
| 25. | இருந்தரு ளிறைவ ! என்பவ பாச |
| | மிரிந்திட நின்பத மிறைஞ்சுவ லடியேன். |
| | (ஜீவகன் பாதபூசை செய்ய) |
| சுந்தரமுனிவர். | | வாழ்க ! வாழ்க ! மன்னவ ! வருதுயர் |
| | சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க ! |
| | சுகமே போலும், மனோன்மணி? |
| ஜீவ. | | சுகம். சுகம். |
| சுந்தர, | 30. | இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்? |
| ஜீவ. | | உன்னரு ளுடையேர்ாக் கென்குறை? க்ஷேமம். |
| | கூடன் மாநகர் குடிவிட் டிப்பாற் |
| | பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி |
| | அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங் |
| 35.. | கடக்கரு மிதன்றிறங் கடைக்கண் சாத்தி |
| | ஆசிநீ யருள நேசித்தேன் நனி. |
| | எத்தனை புரிதா னிருக்கினு மெமக்கெலாம், |
| | அத்த ! நின் னருள்போ லாணெது? குடில ! |
| | இவ்வழி யெழுந்தநம் மிறைவர், கடிபுரி |
| 40. | செவ்விதி னோக்கக் காட்டுக தெரிந்தே. |
| | |
| குடிலன், | | ஊன்வரு பெருநோய் தான்விட வடைந்த |
| | அன்பரின் புறவிவ் வருளாருத் தாங்கி |
| | வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தீ ! |
| | நீயறி யாததொன் றில்லை : ஆயினும், |